இறந்த பின்னும் வாழ்பவர் கேப்டன்!.. விஜயகாந்த் சார்பில் நடிகருக்கு சென்ற உதவித்தொகை!..

Actor Vijayakanth: செத்தும் நடித்தான் சீதக்காதி என்கிற சொல்லை கிராமபுரங்களில் அடிக்கடி கேட்க முடியும். அப்படி உதவி செய்வதில் விஜயகாந்திற்கு நிகரான மற்றொரு மனிதரை பார்க்க முடியாது எனலாம். பல வருடங்களாக தனது அலுவலகத்தில் இலவசமாக பலருக்கும் உணவளித்து வருகிறார் விஜயகாந்த்.

அதை ஆரம்பித்தப்போது சக்திக்குட்பட்டு எவ்வளவு நாள் முடிகிறதோ அவ்வளவு நாள் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என நினைத்தார் கேப்டன். ஆனால் இப்போதும் அங்கு உணவளிக்கும் அளவிற்கு செல்வாக்கு மிக்கவராகவே விஜயகாந்த் இருந்து வந்துள்ளார்.

vijayakanth
vijayakanth
Social Media Bar

சினிமா துறையே கண்டுக்கொள்ளாத சினிமா பிரபலங்களுக்கு கூட விஜயகாந்த் உதவியுள்ளார். யாராவது ஏழை சினிமா பிரபலங்கள் இறந்துவிட்டால் அவர்களது வீட்டிற்கு உதவித்தொகையை அனுப்பி வைப்பது கேப்டனின் பண்பாகும்.

நடிகை பரவை முனியம்மா இறந்தப்போது கூட மீசை ராஜேந்திரன் மூலமாக அவரது வீட்டிற்கு பணத்தை அனுப்பி வைத்தவர் விஜயகாந்த். அதில் இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால் விஜயகாந்த் மிகவும் சீரியஸாக இருந்த அதே நேரத்தில்தான் நடிகர் போண்டா மணியின் இறப்பு நிகழ்ந்தது.

ஆனால் அன்றைய தினம் விஜயகாந்த் சார்பாக போண்டா மணியின் வீட்டிற்கு உதவி தொகை சென்றுள்ளது. விஜயகாந்த் இல்லாத நிலையில் அவரது தொண்டுகளை அவரது குடும்பத்தார் செய்து வருகின்றனர். இது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக அமைந்துள்ளது.