Cinema History
உதவின்னு கேட்டுட்டீங்க.. பைசா காசு வாங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்!.. விஜய், விஜய் அப்பா இருவருக்கும் செய்த உதவி!.
எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் அனைவரும் வாய்ப்பு பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்.
இதனாலையே அறிமுக இயக்குனர்கள் அறிமுக நாயகர்களுக்கு அதிகமாக உதவிகளை செய்திருக்கிறார். முக்கியமாக விஜயின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகரை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டவரே விஜயகாந்த் தான். இந்த நிலையில் தனது மகன் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசைப்பட்ட எஸ்.ஏ சந்திரசேகர் நாளைய தீர்ப்பு என்கிற திரைப்படத்தில் விஜய்யை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.
ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. மேலும் விஜய் அந்த திரைப்படத்தால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் மனமடைந்த எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்த்திற்கு ஃபோன் செய்து தயங்கபடியே எனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார்.
அடுத்த அரை மணி நேரத்தில் விஜயகாந்த் எஸ் ஏ சந்திரசேகரின் வீட்டில் இருந்தார். என்ன உதவி வேண்டும் கேளுங்கள் என்று கூறினார். அப்போது எஸ்.ஏ சந்திரசேகர் எனது மகன் கதாநாயகனாவதற்கு கொஞ்சம் உதவி செய்ய வேண்டும். உங்களையும் விஜய்யையும் சேர்த்து படம் எடுக்க நினைக்கிறேன் அதற்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கேட்டு இருக்கிறார் எஸ் எஸ் சி.
விஜய்காந்தம் அதற்கு ஒப்பு கொண்டுள்ளார் சம்பளம் எவ்வளவு எனக் கேட்ட பொழுது இல்லை எனக்கு எந்த சம்பளமும் வேண்டாம். உதவி என்றுதானே கேட்டீர்கள் நான் இலவசமாகவே நடித்து தருகிறேன் என்று விஜயகாந்த் நடித்த திரைப்படம்தான் செந்தூரப்பாண்டி.
அந்த திரைப்படம் பெரும் வெற்றியைக் கண்டது அதற்குப் பிறகு விஜயகாந்த் வீட்டிற்கு அருகிலேயே எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இடம் வாங்கி வைத்திருந்தார் அந்த இடத்தை விஜயகாந்தின் பெயருக்கு எழுதி வைத்தார் எஸ் ஏ சந்திரசேகர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்