Connect with us

தாய்க்கிட்ட லிவிங்ஸ்டன் எடுத்த சபதம்.. அதை நினைவாக்கிய திரைப்படம்!.

livingston

Cinema History

தாய்க்கிட்ட லிவிங்ஸ்டன் எடுத்த சபதம்.. அதை நினைவாக்கிய திரைப்படம்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாக்கியராஜ் பலருக்கும் உதவி இயக்குனராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்படியாக அவரிடம் உதவி இயக்குனராக இருந்த பலரும் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தை அடைந்தனர்.

இயக்குனர் பாண்டியராஜாக இருக்கட்டும் அல்லது பார்த்திபனாக இருக்கட்டும். இப்படி பலரும் அவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்பு பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளனர்

நடிகர் லிவிங்ஸ்டனும் கூட ஆரம்பத்தில் பாக்கியராஜிடம் உதவி இயக்குனர் ஆகத்தான் பணிபுரிந்து வந்தார். அந்த ஏழு நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு போன்ற திரைப்படங்களில் அவர் பணிபுரிந்திருக்கிறார். அதன் பிறகு சில காரணங்களால் பாக்யராஜை விட்டு பிரிந்து வந்த லிவிங்ஸ்டன் படங்களுக்கு திரைக்கதை எழுதும் வேலையை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் அவருக்கு தெரிந்த சிலரிடம் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என கேட்டிருந்தார். அப்போதுதான் விஜயகாந்தை வைத்து பூந்தோட்ட காவல்காரன் என்கிற திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு வந்தனர். சரி இந்த திரைப்படத்தில் லிவிங்ஸ்டனுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று லிவிங்ஸ்டனிடம் போய் கேட்டபோது முதலில் அவர் யோசித்தாலும் பிறகு நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் அந்தப் படத்தில் லிவிங்ஸ்டனுக்கு சம்பளமாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது அதை தயாரிப்பாளரிடம் பேசி 100 ரூபாய் கட்டுகளாக மாற்றி ஒரு மூட்டை பணமாக அதை எடுத்துச் சென்ற லிவிங்ஸ்டன் நேராக தனது தாயை பார்க்க சென்றார்.

ஏனெனில் சினிமாவிற்கு செல்லும்போதே லட்சம் லட்சமாக பணம் சம்பாதிப்பேன் என தன் தாயிடம் சபதம் எடுத்திருந்தார் லிவிங்ஸ்டன். இந்நிலையில் தாயிடம் சென்ற லிவிங்ஸ்டன் சொன்ன மாதிரியே லட்ச லட்சமாக சம்பாதித்துள்ளேன் என கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார்.

To Top