Connect with us

கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு என்ன செஞ்சாரோ அதையேதான் எனக்கும் செஞ்சார்!.. பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய விஜயகாந்த்!..

vijayakanth karunanithi

Cinema History

கருணாநிதி எம்.ஜி.ஆருக்கு என்ன செஞ்சாரோ அதையேதான் எனக்கும் செஞ்சார்!.. பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய விஜயகாந்த்!..

Social Media Bar

Actor Vijayakanth : நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பிறகு தொடர்ந்து அரசியலுக்கு செல்ல துவங்கினார். அரசியலுக்கு சென்று பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்பது அவரது பெரும் கனவாக இருந்தது.

ஆனால் அவரால் பதவிக்கு வரவே முடியவில்லை. அரசியலை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளுமே அவருக்கு எதிராகதான் இருந்தது. அவரது மண்டபத்து இடத்தை கைப்பற்றுவதற்காகவே கோயம்பேடு மேம்பாலத்தை இழுத்து கட்டினார்கள் என ஒரு பேச்சு மக்கள் மத்தியில் உண்டு.

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இதுக்குறித்து விஜயகாந்த் பேசும்போது நான் கருணாநிதியுடன் ஓரளவு பழகியிருக்கிறேன். ஆனால் ஜெயலலிதாவுடன் நான் பெரிதாக பழகியதில்லை. கருணாநிதியை பொறுத்தவரை அவருடன் நான் நல்ல நட்பில்தான் இருந்தேன்.

ஆனால் அரசியல் என வரும்போது அவர் என்னை எதிரியாக பார்க்க துவங்கினார். அது அவரது அரசியல் பழக்கம் போல. எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் பல வருடங்கள் நட்பாக இருந்தவர்கள். ஆனால் அவர்களே பிறகு அரசியலில் பெரும் விரோதியானதை நாம் பார்த்தோம்.

ஒருமுறை மேடையில் எம்.ஜி.ஆர் பேசும்போது யாராக இருந்தாலும் அரசியல் என வந்துவிட்டால் அவர்களை எதிரிகளாகதான் பார்ப்பார் கருணாநிதி என கூறினார். அது என் விஷயத்தில் உண்மையாகிவிட்டது என கூறினார் விஜயகாந்த்.

To Top