Connect with us

யானை காப்பாளனாக களம் இறங்கும் விஜயகாந்த் மகன்!. இந்த படமாவது ஹிட் அடிக்குமா?

Cinema History

யானை காப்பாளனாக களம் இறங்கும் விஜயகாந்த் மகன்!. இந்த படமாவது ஹிட் அடிக்குமா?

Social Media Bar

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஒரு காலத்தில் விஜயகாந்த் நடித்து வெளியாகும் அத்தனை படங்களும் பயங்கர ஹிட் கொடுத்து வந்தன. இதனால் அதிக வரவேற்பு பெற்ற நாயகனாக விஜயகாந்த் இருந்தார்.

விஜயகாட்ன்ஹிற்கு பிறகு அவரது மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் கதாநாயகனாக ஆசைப்பட்டார். ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. எனவே ஒரு சில படங்களுக்கு பிறகு அவருக்கான வாய்ப்பு என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது.

இதனை தொடர்ந்து வாய்ப்புகளை இழந்த சண்முக பாண்டியன் சினிமாவை விட்டே சென்றுவிட்டார். இந்நிலையில் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளார் சண்முக பாண்டியன். படை தலைவன் என்கிற இந்த திரைப்படம் யானைகள் மற்றும் காட்டு வாழ்க்கை தொடர்பான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில் விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

To Top