Connect with us

ரசிகைன்னு கேசுவலா வந்து சம்பவத்தை பண்ணீட்டாங்க!.. விஜய் சங்கீதா திருமணம் குறித்து பேசிய விஜய் அம்மா!..

vijay sangeetha

News

ரசிகைன்னு கேசுவலா வந்து சம்பவத்தை பண்ணீட்டாங்க!.. விஜய் சங்கீதா திருமணம் குறித்து பேசிய விஜய் அம்மா!..

Social Media Bar

சினிமாவில் சில நடிகர் நடிகைகள் ஒரே படத்தில் ஒன்றாக நடித்து திருமணம் செய்வதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ஒரு சில நடிகர், நடிகைகள் அவர்களுடைய ரசிகர்களை திருமணம் செய்து கொள்வது மிகவும் அரிதான ஒன்றுதான்.

அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தன்னுடைய ரசிகையை திருமணம் செய்து இருக்கிறார். அதைப் பற்றி விஜயின் தாயார் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட செய்தி தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அறியப்படுபவர். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் இறுதியாக இரண்டு படங்களில் மட்டும் கையெழுத்திட்டிருக்கும் விஜய் அடுத்த ஆண்டு முதல் முழுநேர அரசியல்வாதியாக களம் காண இருக்கிறார்.

vijay

ஒருபுறம் ரசிகர்கள் இதற்கு கவலை தெரிவித்தாலும், இனி அரசியல் களத்தில் விஜயை பார்க்க முடியும் என்பதால் வரவேற்பும் கொடுக்கிறார்கள். விஜய் ஆரம்பகாலகட்டத்தில் நடிக்க வரும் பொழுது அவரை அனைவரும் கேலி செய்தார்கள். இவருக்கெல்லாம் ஹீரோ கதாபாத்திரம் ஒத்து வராது என்று, ஆனால் அதன் பிறகு அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகினார்கள். இந்நிலையில் பெண் ரசிகைகளும் அவருக்கு உள்ளார்கள்.

விஜய் திருமணம் பற்றி அவரின் அம்மா கூறிய கருத்து

நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவும், அவரது சகோதரி தீபாவும் விஜயை பார்ப்பதற்காக 1996-ல் லண்டனிலிருந்து கிளம்பி வந்தார்கள். விஜயின் வீட்டின் நுழைவு வாயிலில் நின்றவர்கள் அவர் காலமெல்லாம் காத்திருப்பேன் பப்பிடிப்பில் இருப்பார் என கூறியிருக்கிறார்கள். உடனே அங்கு சென்று விஜயை சந்தித்து இருக்கிறார்கள். விஜய் அவர்களிடம் பேசிவிட்டு அம்மா, அப்பா வீட்டில் இருப்பார்கள் சென்று பாருங்கள் என கூறி இருக்கிறார்.

vijay sangeetha

இருவரும் எங்களை வந்து சந்தித்தார்கள். அதன் பிறகு மீண்டும் விஜயை சந்திப்பதற்காக 1997 ஆம் ஆண்டு வந்தார்கள். அப்போது தான் விஜயின் அப்பாவிற்கு அவரை பிடித்து போக, அதன் பிறகு எங்களுடைய சம்மதத்தின் மூலம் தான் விஜய்க்கு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

To Top