ரெண்டே நாளில் இவ்வளவு வசூலா? –  விருமன் வசூல் சாதனை

பொதுவாக இயக்குனர் முத்தையா திரைப்படங்கள் என்றாலே குடும்ப மக்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு. ஏனெனில் குடும்பத்துடன் போய் பார்க்க கூடிய படமாக இயக்குனர் முத்தையாவின் திரைப்படம் இருக்கும்.

தற்சமயம் வெளியாகியுள்ள கொம்பன் திரைப்படமும் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகும் முன்பே படத்தில் வரும் கஞ்சா பூவு கண்ணால பாடல் வெகுவாக பிரபலமடைந்தது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

நடிகர் கார்த்திக்கும் ஒரு நல்ல படமாக விருமன் அமைந்துள்ளது. இவர் ஏற்கனவே முத்தையாவுடன் இணைந்து கொம்பன் என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

அதுவும் கூட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விருமன் திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே படம் 16.65 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. 

ஒரு வாரத்தில் படம் எப்படியும் 50 கோடிக்கு ஓடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் கூட அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமான வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிப்பதால் இந்த படமும் கூட அவருக்கு சிறந்த படமாகவே அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh