வீட்டில் வரிசையாக தேசிய கொடி ஏற்றி வரும் பிரபலங்கள்

நம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடம் ஆகிறது. நாளை இந்தியாவின் 75 வது சுதந்திர தினமாகும். இந்த நாளை சிறப்பானதாக மாற்ற இந்திய பிரதமர் அனைவரின் வீட்டிலும் நாளை தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தேசிய கொடியை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. வீட்டுக்கு ஒரு தேசிய கொடி என இந்தியா முழுவதும் தேசிய கொடி வழங்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

தற்சமயம் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி அதை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே இன்று நடிகர் ரஜினிகாந்த் அனைவரும் வீட்டில் தேசிய கொடி ஏற்றவும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்சமயம் நடிகர் சூரியும் கூட தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி அதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். நடிகர் மாதவனும் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Refresh