விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனனா? – வெளியான மாஸ் தகவல்

தற்சமயம் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக நடிகர் விஜய் இருக்கிறார். தற்சமயம் தெலுங்கு சினிமா விரும்பிகளை தன் பக்கம் ஈர்ப்பதற்காக தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் சேர்ந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி. 

ஏற்கனவே தெலுங்கில் மகரிஷி போன்ற படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் வம்சி. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகவும் தெலுங்கு கதாநாயகியான ராஷ்மிகா நடிக்கிறார். மேலும் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் மகேஷ் பாபுவும் வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த படம் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாரிசுக்கு அடுத்து தளபதி லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மக்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் லோகேஷ் இயக்க போகும் படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் சஞ்சய் தத், ப்ரித்திவிராஜ், அர்ஜூன் ஆகியோர் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் தற்சமயம் தமிழின் பிரபல இயக்குனரான கவுதம் மேனனும் கூட இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Refresh