Connect with us

ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும்!.. சிம்பு படத்தின் பெயரை மாற்றி அதில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.

simbu vishnu vishal

News

ஆட்டோ கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும்!.. சிம்பு படத்தின் பெயரை மாற்றி அதில் நடிக்கும் விஷ்ணு விஷால்!.

Social Media Bar

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக சிம்பு இருந்து வருகிறார். சிம்புவை வைத்து பல காலங்களாகவே படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார் இயக்குனர் கோகுல். அப்படியாக 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட திரைப்படம்தான் கொரோனா குமார் என்கிற திரைப்படம்.

கொரோனா வந்திருந்த அந்த சமயத்தில் அதையே திரைப்படத்திற்கு பெயராக வைத்து படத்தின் படப்பிடிப்பை துவங்க இருந்தனர் இதற்காக முன் தொகையாக ஒரு கோடி ரூபாய் சிம்புவிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா குமார் திரைப்படம் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தின் பட பிடிப்பானது நடக்கவே இல்லை.

simbu
simbu

ஆனால் அதில் ஏற்கனவே அதிதி சங்கர், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்சமயம் சிம்பு மிகவும் பிஷியாகி விட்டதால் அந்த திரைப்படத்திற்கான கதாநாயகனை மாற்றி இருக்கின்றனர்.

விஷ்ணு விஷால்தான் தற்சமயம் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷால் பெரும்பாலும் கொஞ்சம் வித்தியாசமான கதை களங்களை மட்டும்தான் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் என்பதால் மக்கள் மத்தியில் அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.

இந்த நிலையில் கொரோனா குமார் என்கிற பெயரிலேயே அந்த படத்தை எடுக்காமல் வைப் குமார் என்ற படத்தின் பெயரை மாற்றி இருக்கிறாராம் இயக்குனர் கோகுல். இதனால் பலரும் இது வேறு ஏதோ திரைப்படம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் கொரோனா குமார் திரைப்படத்தைதான் அவர் மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து இயக்குகிறார்.

To Top