Tamil Cinema News
9 பட சான்ஸை இழந்த விஷ்ணு விஷால்.. தரமான படம் எல்லாம் போய் இருக்கே..!
தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஓரளவு வரவேற்பு பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.
அவர் நடித்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் துவங்கி அதற்கு பிறகு அவர் நடித்த ஜீவா, குள்ளநரி கூட்டம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன.
இவ்வளவு வரவேற்பு பெற்றாலும் ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலுக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக ராட்சசன் திரைப்படம் அமைந்தது.
ராட்சசன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷாலுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்தன. ஆனால் அந்த சமயத்தில்தான் அவர் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும்பொழுது ராட்சசன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நான் நிறைய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிறகு அந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இப்படியாக ஒன்பது திரைப்படங்களில் வாய்ப்புகளை நான் இழந்தேன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் மட்டும் நான் இரண்டு திரைப்படத்தில் நடிப்பதற்கு இருந்தேன். பியார் பிரேமா காதல் திரைப்படத்திலும் நான் தான் நடிப்பதாக இருந்தது.
அது இல்லாமல் ஜெர்சி திரைப்படம், ஜப்பான் திரைப்படம், ஓ மண பெண்ணே எஃப் ஐ ஆர், போன்ற திரைப்படங்களில் எல்லாம் நடிப்பதாக இருந்தது ஆனால் அவை எல்லாமே பிறகு நின்று விட்டன எனக்கு என்னதான் ஆகிவிட்டது என்று எனக்கே பயம் வந்துவிட்டது. அதன் பிறகு தான் நானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினேன் என்று கூறியிருக்கிறார் விஷ்ணு விஷால்.
