Tamil Cinema News
கதையே இல்லாம நடிச்ச படம்.. அன்னைக்கு எடுத்த முடிவு.. விஷ்ணு விஷால் வாழ்க்கையை மாற்றிய விஷயம்..!
சில படங்களின் தோல்விகளுக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களில் அதிக முக்கியத்துவம் காட்டி வருகிறார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்து வந்த விஷ்ணு விஷால் திடீரென்று நடுவில் சில வித்தியாசமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பது உண்டு.
அவர் நடித்த ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதைகளத்தை கொண்டது. ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது.
இந்த நிலையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். விஷ்ணு விஷால் அவர் கூறும் பொழுது நான் நடித்த திரைப்படத்திலேயே கதையே இல்லாத ஒரு திரைப்படம் என்றால் அது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் தான்.
ஆனால் அது பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு எனது நண்பர் ஒருவர் என்னிடம் ஒரே மாதிரியான படமாக நடித்துக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்தால் அது உனக்கு ரிஸ்க் ஆகிவிடும் என்று கூறினார்.
அதற்காகவே நான் இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அதன் பிறகு நானே சொந்த தயாரிப்பில் அந்த படத்தை எடுத்து நடித்தேன். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது அப்பொழுதுதான் முடிவு செய்தேன்.
நல்ல கதைக்கரு உள்ள கதைகளாக இருந்தால் அதை வேறு தயாரிப்பாளர் தயாரிப்பில் நடிக்க வேண்டும். இந்த மாதிரி வித்தியாசமான படங்களை நடிக்கும் பொழுது அதற்கு நானே தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் விஷ்ணு விஷால்.
