Tamil Cinema News
சமந்தா சொல்றதை செய்யாதீங்க..! விஷ்ணு விஷால் மனைவி எச்சரிக்கை!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. சமீபத்தில் சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே அடிக்கடி தனது இண்ஸ்டா பதிவில் மருத்துவம் குறித்த பல பதிவுகளை இட்டு வருகிறார். முன்னதாக அவர் நீராவிக் குளியல் பற்றி புகைப்படம் போட்டபோதும் அதில் நிர்வாணமாக போட்டோ பதிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
அதுபோல தற்போது அவர் இட்டுள்ள ஒரு பதிவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நெபுலைசர் கருவியை வைத்து மூச்சு பிடிக்கும் படத்தை பதிவிட்டுள்ள சமந்தா, வைரல் தொற்றுகளுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன் மாற்று வழியாக நெபுலைசரை பயன்படுத்துவது குறித்து பரிந்துரைத்திருந்தார்.
இதை மருத்துவர்கள் பலரும் ஆட்சேபித்துள்ளனர். சமந்தா மருத்துவம் படித்தவர் அல்ல. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சமந்தா சொல்வது போல மருத்துவ முறைகளை முயன்று பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமந்தாவின் பதிவிற்கு நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும், விளையாட்டு வீராங்கனையுமான கட்டா ஜுவாலா பதிலளித்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் “ம்ருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என பலரும் பேசி வரும் நிலையில் சமந்தாவின் இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா சொல்வதை யாரும் பின்பற்றாதீர்கள். உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் சென்று, அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையே எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சமந்தா தன் சொந்த அனுபவத்தின் பேரிலேயே தான் அதை எழுதியதாகவும், எனினும் பொது வெளியில் மருத்துவம் சார்ந்து பதிவிடும்போது இனி கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டியது உள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
