நடிகை நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி வரும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகை நயன்தாரா அதிகமாக போராடி இருக்கிறார்.
மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாராவிற்கு தமிழில் அதிக வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார் நயன்தாரா.
ஒரு கட்டத்திற்கு பிறகு நடுவில் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இந்த நிலையில்தான் அவருக்கு பில்லா திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பில்லா திரைப்படத்தின் பிகினியில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நிறைய நடிகைகள் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
நயன்தாரா செய்த செயல்:
இந்த நிலையில் இது குறித்து விஷ்ணுவர்தன் ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அவர் கூறும்பொழுது அப்பொழுது நடிகை நயன்தாராவிற்கு வாய்ப்புகள் அதிகமாக வராமல் இருந்ததால் வாய்ப்புகளை பிடிக்க வேண்டும் என்று வெறியோடு இருந்தார்.
அதனாலேயே பில்லா திரைப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் அப்படி அவருக்கு இருந்த வெடியின் காரணமாகதான் இப்பொழுதும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக அவர் இருந்து வருகிறார் என்று கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.







