Connect with us

எவ்வளவோ நாங்க கெஞ்சினோம்!.. ஆனா அவங்க கேக்கலை.. கமலால் பெரும் தோல்வியை கண்ட விவேக்.. மேடையில் கொடுத்த ஓப்பன் டாக்!.

kamal vivek

News

எவ்வளவோ நாங்க கெஞ்சினோம்!.. ஆனா அவங்க கேக்கலை.. கமலால் பெரும் தோல்வியை கண்ட விவேக்.. மேடையில் கொடுத்த ஓப்பன் டாக்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விவேக். இயக்குனர் பாலச்சந்தர் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் வெவ்வேறு பணிகளில் இருந்து வருகிறார் நடிகர் விவேக்.

பொதுவாக கவுண்டமணி மாதிரியான நடிகர்கள் காமெடி செய்யும்போது மற்ற நடிகர்களை கேலி செய்துதான் காமெடி செய்வார். ஆனால் விவேக்கை பொறுத்தவரை அவர் அந்த மாதிரியான காமெடிகளில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை.

அதிகப்பட்சம் மக்களுக்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் விதத்தில்தான் இவரது காமெடி இருக்கும். இதனால் தொடர்ந்து விவேக் காமெடிக்கு என்று ஒரு தனிப்பட்ட கூட்டம் இருந்து வந்தது. இதனால் விஜய் அஜித்தில் துவங்கி பல முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் விவேக்.

விவேக் நடித்த படம்:

பெரும்பாலும் வெகு காலங்களாகவே இளமை கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் நடிகர் விவேக். எப்போதுமே ஹீரோவுக்கு தோழன் கதாபாத்திரத்தில்தான் அவர் திரைப்படங்களில் வருவார்.

இந்த நிலையில் அடுத்து கதாநாயகனாக நடிக்கவும் ஆசைப்பட்டார் விவேக். பொதுவாக காமெடி நடிகர்கள் ஒரு திரைப்படத்திலாவது கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் கவுண்டமணி, வடிவேலு மாதிரியான காமெடி நடிகர்கள் பலரும் தொடர்ந்து கதாநாயகனாக நடித்துள்ளார்.

அப்படியாக விவேக்கும் காமெடி கதாநாயகனாக நடித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் பாலக்காட்டு மாதவன். இந்த திரைப்படத்தில் நடிகை சோனியா அகர்வால் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படத்தின் கதைப்படி ஒரு மூதாட்டியை தத்தெடுத்து விவேக் வளர்க்க நினைப்பார். அதனால் அவருக்கு வரும் இடையூறுகளை காமெடியாக சொல்லும் படமாக பாலக்காட்டு மாதவன் இருக்கும். ஆனால் அந்த படம் பெரும் தோல்வியை கண்டது.

படத்தின் தோல்வி:

அதுக்குறித்து விவேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது பாலக்காட்டு மாதவனுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 300க்கும் அதிகமான திரையரங்குகள் கிடைத்தது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படத்தின் ரைட்ஸ் விற்றது. வெளிநாடுகளில் கூட அதிக திரையரங்குகள் கிடைத்தது.

ஆனால் அந்த சமயத்தில் ஒரு பெரிய ஹீரோவின் படத்தை பாகுபலி படத்திற்கு முன்னாள் வெளியிட வேண்டும் என்று எங்கள் படத்தின்ப்போது வெளியிட்டு விட்டனர். இதனால் அனைத்து திரையரங்குகளும் குறைந்து எங்கள் படம் குறைந்தது.

நாங்கள் எவ்வளவோ அந்த ஹீரோவிடம் கெஞ்சியும் அவர் கேட்கவில்லை என பதில் அளித்துள்ளார் விவேக். பாலக்காட்டு மாதவன் படம் வெளியான சமயத்தில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படம்தான் அதற்கு போட்டியாக வெளியானது. எனவே அதைதான் விவேக் கூறுகிறார் என கூறப்படுகிறது.

To Top