Actress
பம்பு செட்டில் குளியல் வீடியோ விட்ட பிரபல வி.ஜே அஞ்சனா!.. பார்த்து ஆடிப்போன இளசுகள்!.
VJ Anjana: வெள்ளித்திரையை விடவும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளின் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆவது வழக்கம். அதுப்போல தற்போது சின்னத்திரை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக மக்களால் அறியப்பட்ட வி.ஜே. அஞ்சனா ரங்கன் தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
யார் இந்த வி.ஜே. அஞ்சனா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருப்பவர் வி.ஜே. அஞ்சனா. இவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய திரையின் சினிமா விழாக்களின் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக இருந்து வரும் வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதன் காரணமாகவே அஞ்சனா ரங்கன் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளார். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் வைத்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் சமீபகாலமாக அவ்வப்போது கிளாமர் உடையணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் நடிகர் விஜய் உட்பட பல திரைப்பட நடிகர்களின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும் சின்னத்திரையில் அவர் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் சிங்கர், நட்சத்திர ஜன்னல், நீங்களும் நாங்களும் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவை ஒருபுறம் இருக்க இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் திரைப்படத்தில் நடித்து பிரபலமான சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் வீடியோ
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயல்வெளியில் பம்புசெட்டில் குளிக்கும் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிலர் இந்த இடம் கிராமம் இல்லை, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தான் அவர் இந்த குளியல் வீடியோவை எடுத்து உள்ளார் என்று கமெண்ட் பகுதியில் பதிவாகி வருகிறது. மேலும் சிலர் பல வகையான கமெண்ட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
