Connect with us

அந்த ஆடை போட்டிருந்தா அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிடுவாங்க.. சின்னத்திரையிலும் பிரச்சனைகளை சந்தித்த வி.ஜே அர்ச்சனா!.

vj archana

News

அந்த ஆடை போட்டிருந்தா அட்ஜெஸ்ட்மெண்டுக்கு கூப்பிடுவாங்க.. சின்னத்திரையிலும் பிரச்சனைகளை சந்தித்த வி.ஜே அர்ச்சனா!.

Social Media Bar

சினிமாவில் நடிக்கும் நடிகைகள், துணை நடிகைகள் ,பின்னணியில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் தொகுப்பாளர்கள் என சினிமா துறையைச் சேர்ந்த அனைத்து பெண்களும் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்றால் அது அட்ஜஸ்ட்மென்ட் தான். மேலும் சர்ச்சை, கிசுகிசு என பல்வேறு வகையான பிரச்சனைகளை நாள்தோறும் சந்தித்து வருவார்கள்.

தற்போது அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை தலைதூக்க ஆரம்பித்திருக்கும் இந்நேரத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருக்கும் வி.ஜே. அர்ச்சனா சந்தோக் தற்போது ஒரு தகவல் ஒன்றை கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ச்சனா சந்தோக்

வி.ஜே. அர்ச்சனா சந்தோக் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை மற்றும் ரேடியோ ஜாக்கி ஆவார். பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் அர்ச்சனா மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு தொகுப்பாளராக இருக்கிறார்.

இவர் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே ஜெயா டிவியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு இவர் சன் டிவிக்கு மாறினார்.

archana chandhoke

பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக சன் டிவியில் இருந்து வெளியேறினார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீ தமிழில் அதிர்ஷ்ட லட்சுமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு ஜூனியர் சூப்பர் ஸ்டாரின் நகைச்சுவை நிகழ்ச்சியின் நடுவராக தோன்றினார்.

இவ்வாறு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய வி.ஜே. அர்ச்சனா 2020 ஆம் ஆண்டு போட்டியாளராக பிக் பாஸில் நுழைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் பார்வையாளர்களின் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என மாறி மாறி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வி.ஜே. அர்ச்சனா பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் பிரச்சனைகளை சந்தித்த வி.ஜே. அர்ச்சனா

இந்நிலையில் ஒரு பேட்டில் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் அர்ச்சனா பேசும்போது நான் ஆரம்ப காலகட்டத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். அப்போது நான் sleeveless உடையை அணிந்திருப்பேன். அந்த காலகட்டத்தில் sleeveless அணிந்து கொண்டால் கிளாமர் என அனைவரும் நினைத்துக் கொண்டார்கள்.

archana chandhoke

நான் 2000 கால கட்டங்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் போது, இவள் இந்த உடை அணிந்து இருக்கிறாள். அப்போ இவள் அப்படிப்பட்டவள் தான் எனவே இவளை ஈசியாக கூப்பிடலாம் என பலரும் என்னை விமர்சனம் செய்தார்கள்.

அந்த உடையை பலரும் கிளாமர் உடை என நினைத்தார்கள். அதனால் தான் நான் திருமண ஆன பிறகு அந்த உடை அணிவது நிறுத்தி விட்டேன். மேலும் அவர் பேசும் பொழுது ஒரு பெண்ணின் கேரக்டர் என்பது அவளின் உள்ளத்தையோ அல்லது முகத்தையோ, கண்களையோ குறிப்பிட்டு யாரும் பேச மாட்டார்கள். அவர்கள் பயன்படுத்தும் அத்தனை கெட்ட வார்த்தைகளும் இரு கால்களுக்கு நடுவில் தான் என அவர் மனம் திறந்து பேசி இருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

To Top