சிறுத்தை சிவாவை பார்த்து தெலுங்கு திரையுலகமே வாய் பிளக்கும்.. இதுவரை யாருக்குமே தெரியாத விஷயங்கள்.. வெளியிட்ட நடிகர் சூர்யா.!
சிறுத்தை சிவாவை ஒரு கமர்ஷியல் இயக்குனராக பலருக்குமே தெரியும். ஆனால் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த நிபுணராக அவரை யாருக்குமே தெரியாது. அந்த விஷயத்தை நடிகர் சூர்யா தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
சூர்யா தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே சிறுத்தை சிவா நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். சிறுத்தை சிவா தெலுங்குப் பின்புலத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட தமிழில் அதிக பிரபலமான இயக்குனராக இருக்கிறார்.
இந்த நிலையில் சூர்யா அவரை குறித்து கூறும் பொழுது சிறுத்தை சிவா என்னிடம் பேசும்பொழுது தன்னுடைய 13 வது வயதிலேயே வீடியோ எடிட்டிங் செய்ய துவங்கி விட்டேன் என்று கூறினார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
சிறுத்தை சிவா:

அவரும் வெற்றிமாறனும் ஒன்றாக தான் படித்தார்கள் வெற்றிமாறன் ஒருமுறை என்னிடம் கூறும் பொழுது அவர் கல்லூரியிலேயே கோல்ட் மெடல் வாங்கியவர் என்று கூறினார். அதேபோல தெலுங்கு சினிமா துறையில் சிறுத்தை சிவா குறித்து விசாரிக்கும் பொழுது 2000களில் கிரீன் மேட் மற்றும் கிராபிக்ஸ் மாதிரியான தொழில்நுட்பங்களில் விளம்பரங்கள் அல்லது திரைப்படங்கள் எடுக்கிறோம் என்றாலே சிறுத்தை சிவாவிடம் தான் ஆலோசனை கேட்போம்.
ஏனெனில் அப்பொழுதே அதில் அதிக தெளிவான ஒரு நபராக சிறுத்தை சிவா இருந்தார் என்று கூறுகின்றனர். எனக்கு ஆச்சரியமான விஷயம் எல்லாம் இவ்வளவு விஷயம் சிறுத்தை சிவாவுக்கு தெரிந்தும் கூட இவரை குறித்த இந்த விஷயங்கள் மக்களுக்கு தெரியவில்லை என்பதுதான் இவரும் எந்த நேர்காணலிலும் இதை கூறியது கிடையாது என்று அவரைக் குறித்து பகிர்ந்து இருக்கிறார் சூர்யா.