தற்சமயம் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தி நடித்த ஜப்பானை விடவும் இந்த படத்திற்குதான் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரத்திற்கு க்ளிண்ட் ஈஸ்ட் உட் என்னும் நடிகரை மிகவும் பிடிக்கும். அவர்தான் லாரன்ஸிற்கு ஆலிஸ் சீசர் என்னும் பெயரை வைத்ததாக படத்தில் காட்டப்படும். க்ளிண்ட் ஈஸ்ட் உட் அமெரிக்காவில் பிரபலமான ஒரு கெளபாய் கதாநாயகன் ஆவார்.
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுப்பிடித்த பிறகு மூன்று தேசத்து மக்கள் அங்கு குடியேறினர். ஆனால் அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த செவ்விந்திய மக்களுக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா வளர துவங்கிய காலக்கட்டத்தில் அங்கு உருவானதுதான் இந்த கெளபாய் கலாச்சாரம்.
கெளபாயில் நல்லவர்கள் கெட்டவர்கள் என இருவருமே இருந்தனர். அப்போது அமெரிக்காவில் பல இடங்களில் தங்கம் கிடைத்தது. அவற்றை திருடுபவர்கள் அதிகமாக கெளபாய்களாக இருந்தனர். அதே போல அதிக குற்றம் செய்பவர்களின் தலைக்கு அரசு ஒரு விலை நிர்ணயிக்கும். அந்த குற்றவாளிகளை கொன்று அந்த தொகையை வாங்கும் பௌண்டி ஹண்டர் என்னும் கெளபாய்களும் இருந்தனர்.
மெல்ல அமெரிக்கா வளர்ந்த பிறகு இந்த கெளபாய் கலாச்சாரம் அறவே இல்லாமல் போனது. ஆனால் அதை திரைப்படம், காமிக்ஸ் மூலமாக அடுத்த தலைமுறைக்கு அமெரிக்கர்கள் கடத்தினர். அப்படி திரைப்படமாக்கப்பட்டது அதில் மிக பிரபலமான திரைப்படங்கள்தான் க்ளிண்ட் ஈஸ்ட் உட்டின் திரைப்படங்கள்.
க்ளிண்ட் ஈஸ்ட் உட் தீமைக்கு எதிராக தனியாக போராடும் ஒரு நாடோடி கெளபாயாக படங்களில் நடித்தார். அவற்றில் மூன்று படங்கள் பிரபலமானவை. A Fistful of Dollars, For a few Dollars More, The Good the bad and the ugly, ஆகிய இந்த மூன்று படங்கள் கௌபாய் திரைப்படங்களுக்கு ஒரு இலக்கணமாக அமைந்தன.
அதன் பிறகு ஒரு கௌபாய் திரைப்படம் வருகிறது என்றால் அதில் கண்டிப்பாக இவரது திரைப்பட சாயல் இருக்கும் என்கிற நிலை இருக்கும். இந்த படத்தை பார்த்து வியந்துப்போன கார்த்திக் சுப்புராஜ் அவரையே தனது திரைப்படத்தில் அனிமேஷனாக கொண்டு வந்திருந்தார்.