News
விக்னேஷ் சிவன் குழந்தைக்கு வாடகைத்தாய் யார்? – கமிஷனருக்கு போன புகார்!
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிறந்த விவகாரத்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் நடிகை நயன்தாராவுக்கும் – விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 4 மாதங்கள் முன்னதாக குழந்தை பிறந்தது. அதை தொடர்ந்து திருமணமாகி எப்படி 4 மாதங்களில் குழந்தை பிறக்கும் என பலரும் கேள்விகளை எழுப்பினர்.

தம்பதியர் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றிருக்கலாம் என்று பேசப்பட்ட நிலையில் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுவதற்கான தகுதி மற்றும் விதிமுறைகளை விக்னேஷ் சிவன் – நயன்தாரா மீறியிருப்பதாகவே கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியருக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த வாடகைத்தாய் துபாயில் உள்ளதாக தகவல்கள் கசிந்தது.
ஆனால் துபாயில் வாடகைத்தாய் முறை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாம். இதனால் எந்த அடிப்படையில் அவர்கள் குழந்தை பெற்றார்கள் என்று பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெறுதல் போன்ற செயல்பாடுகள் மூலமாக இளைய சமுதாயத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால் விசாரணை குழு விசாரித்து அறிக்கை சமர்பித்தப்பின் அரசின் உத்தரவை பொறுத்து காவல்துறையின் நடவடிக்கை அமையும் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
