Connect with us

தோல்வி கொடுத்த பிறகும் சூர்யாவும் அஜித்தும் சிறுத்தை சிவாவை தாங்க இதுதான் காரணம்.!

ajith siruthai siva

Tamil Cinema News

தோல்வி கொடுத்த பிறகும் சூர்யாவும் அஜித்தும் சிறுத்தை சிவாவை தாங்க இதுதான் காரணம்.!

Social Media Bar

Siruthai Siva is one of the directors in Tamil cinema who receives mixed reviews. As for Siruthai Siva, it cannot be said that he always delivers successful films.

தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனங்களை பெறும் இயக்குனர்களில் சிறுத்தை சிவாவும் ஒருவர். சிறுத்தை சிவாவை பொறுத்தவரை எப்பொழுதும் வெற்றி படங்களை கொடுப்பார் என்று கூறமுடியாது.

அதேபோல எப்பொழுதும் தோல்வி படங்களை கொடுப்பார் என்றும் கூற முடியாது. அவர் இயக்கிய திரைப்படங்களில் விசுவாசம், வீரம் மாதிரியான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஆனால் விவேகம் மாதிரியான திரைப்படங்கள் தோல்வியை தந்து இருக்கின்றன.

அதேபோல சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான கங்குவா திரைப்படம் அதிகமான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் அந்த படம் தோல்வி படமாக அமையவில்லை. போட்ட முதலீட்டை எடுத்து விட்டார்கள் ஆனால் லாபம் என்று பெரிதாக அந்த படத்திற்கு கிடைக்காமல் போய்விட்டது என கூறப்படுகிறது.

இதுதான் காரணம்:

siruthai siva

siruthai siva

இந்த நிலையில் இப்படி எல்லாம் இருந்துமே கூட அஜித் மற்றும் சூர்யா தொடர்ந்து சிறுத்தை சிவாவிற்கு வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர் பெரும்பாலும் சிறுத்தை சிவாவுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்கள் அவரைப் பற்றி நல்லவிதமாக கூறுவதை பார்க்க முடிகிறது.

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கூட நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவாவை மிகவும் பெருமையாக பேசியிருந்தார். இதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது சிறுத்தை சிவா அனைவருக்கும் பிடித்தமான ஒரு மனிதராக இருக்கிறார்.

திரைப்படங்களில் வெற்றி தோல்வி கொடுத்தாலும் கூட பழகும் விதத்தில் அவரை அனைத்து நடிகர்களுக்கும் பிடிக்கிறது என்று கூறப்படுகிறது. அதனால்தான் அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் கூட அவரை இன்னமும் கைவிடாமல் இருக்கின்றனர். அஜித் மீண்டும் சிறுத்தை சிவா திரைப்படத்தில்தான் நடிக்க இருக்கிறார்.

To Top