News
இவ்வளவு நாள் காத்திருந்து மஞ்சுமல் பாய்ஸ்க்கு சம்பவம் செய்த இளையராஜா!. இப்படி ஒரு ட்ரிக் இருக்கா?
இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வரும் பிரச்சனைதான் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சென்று கொண்டுள்ளது. பொதுவாகவே ஒரு பாடலுக்கான காப்புரிமை என்பது திரைப்படங்களை பொறுத்தவரை தயாரிப்பு நிறுவனங்களுக்குதான் செல்லும்.
ஆனால் தன் பாடலுக்கான காப்புரிமை தனக்கே வேண்டும் என இளையராஜா கேட்பதே குழப்பமான சங்கதியாக உள்ளது. இதற்கு நடுவே தன்னுடைய பாடல்களை பயன்படுத்திவிட்டார்கள் என பல திரைப்படங்கள் மீது வழக்கு தொடர்ந்து வந்தார் இளையராஜா.
அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மீதும் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. அதில் வரும் கண்மனி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டுள்ளார் இளையராஜா என கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் படக்குழு குணா படத்தின் தயாரிப்பாளரிடம் காப்புரிமை பெற்றுதான் இந்த பாடலை படத்தில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது இளையராஜா எப்படி இவர்கள் மீது வழக்கு போட முடியும் என்பது ஒருபக்கம் கேள்வியாக இருக்கிறது.
இதுக்குறித்து சினிமா துறையில் உள்ளவர்கள் கூறும்போது மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது படம் வெளியானப்போதே இளையராஜாவிற்கு தெரிந்திருக்கும். ஆனால் படம் நல்ல வசூலை பெறும்போது அதன் வழியாக பெரும் தொகையை இழப்பீடாக பெறலாம் என அவர் காத்துக்கொண்டிருந்தார் என்று கூறுகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் இன்று ட்ரெண்டிங்கான டாப்பிக்காக மாறியுள்ளார் இளையராஜா.
