Anime
இட்டாச்சி உச்சிஹா பரம்பரையிலேயே தனித்துவமானவன் ஏன் தெரியுமா?
ஒட்டு மொத்த நருட்டோ சீரிஸ்களிலேயும் அதிகமான மக்களால் விரும்பப்படும் நாயகனாக இட்டாச்சி உச்சிஹா இருக்கிறான். இத்தனைக்கு பாதி கதை வரை நெகட்டிவான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறான் இட்டாச்சி.
ஆனால் பார்க்க போனால் மொத்த நருட்டோவிலும் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாக இட்டாச்சி இருக்கிறான். 13 வயதிலேயே இட்டாச்சி அவனது மொத்த க்ளானையும் அழிக்கிறான் என்றால் அது சாதாரண விஷயமல்ல. அதற்கு காரணமும் உண்டு.
சேஜ் ஆஃப் சிக்ஸ் பாத்தின் மகனான இந்திராவின் வம்சாவளிகள்தான் உச்சிஹா பரம்பரையினர். இந்திராவை பொறுத்தவரை அவன் கெட்ட வழியில் செல்ல கூடியவனாக இருந்ததால் அவனால் உருவான உச்சிஹா பரம்பரையும் அப்படியே இருந்தது.

எந்த இடத்தில் அன்பின் மீது இருக்கும் நம்பிக்கை போகிறதோ அப்போது உச்சிஹா பரம்பரையினர் வழி மாறி செல்ல துவங்கிவிடுவார்கள். மேலும் அவர்களை நெருங்கிய உறவுகளின் இறப்புதான் அவர்களுக்கு ஷேரிங்கான் சக்தியையே கிடைக்க செய்யும்.
இந்திராவே ஷேரிங்கான் வந்த பிறகுதான் கெட்ட வழியில் செல்ல துவங்குவான். மொத்த உச்சிஹா க்ளானும் இப்படி இருக்கும்போது அதில் மாறுப்பட்ட ஒருவனாக இட்டாச்சி இருக்கின்றான். மற்ற உச்சிஹா சினோபிகளை விட அதிக சக்திவாய்ந்தவனாக இட்டாச்சி இருந்தப்போதும் ஒருபோதும் தீய வழியில் அவன் செல்லவில்லை.
சிறு வயது முதலே போரை பார்த்து வளர்ந்தவன் என்பதால் ஹிடன் லீஃப் வில்லேஜில் மீண்டும் ஒரு போர் நடக்க கூடாது என நினைக்கிறான் இட்டாச்சி. நான்காவது ஹொக்காகேவான மினாட்டோவை கொன்று ஹிடன் லீஃப் வில்லேஜை தனது ஆளுமைக்கு கொண்டு வர வேண்டும் என திட்டமிடுகின்றனர் உச்சிஹா குழுவினர்.
எப்படியும் உச்சிஹா பரம்பரையினரால் மொத்த ஹிடன் லீஃப் வில்லேஜையும் அழிக்க முடியும். அதே போல ஹிடன் லீஃப் வில்லேஜில் இருக்கும் சக்தி வாய்ந்த சினோபிகளால் உச்சிஹா பரம்பரையிலும் சேதம் இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு ஹிடன் லீஃப் வில்லேஜின் ஷினோபியாக தனது உச்சிஹா க்ளான் மக்களை அழிப்பதன் மூலம் ஹிடன் லீஃப் வில்லேஜில் நடக்கும் போரை தடுக்க முடியும் என முடிவெடுக்கிறான் இட்டாச்சி. இதை அவன் செய்யும்போது அவனுக்கு 13 வயதுதான்.
உச்சிஹா பரம்பரையிலேயே ஒருவன் தன்னுடைய பகைக்காக உயிரை கொல்லாமல் மற்றவர்கள் வாழ்வதற்காக பொது நலத்துடன் தன்னை தானே தண்டித்துக்கொண்டு தன் மக்களையே கொன்றவன் என்றால் அது இட்டாச்சி மட்டும்தான். அதனால்தான் இட்டாச்சி உச்சிஹாவின் தனித்துவமான நிஞ்சாவாக அறியப்படுகிறான்.
