Connect with us

கவர்ச்சி காட்டுறதுக்காக பண்ணல.. கீர்த்தி சுரேஷ் விருது வழங்கும் விழாவிற்கு அப்படி வர அதுதான் காரணம்!.

keerthi suresh

Actress

கவர்ச்சி காட்டுறதுக்காக பண்ணல.. கீர்த்தி சுரேஷ் விருது வழங்கும் விழாவிற்கு அப்படி வர அதுதான் காரணம்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில்  ஒரு சில திரைப்படங்களில் நடித்தே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக இவர் தமிழில் இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் இது என்ன மாயம் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. அதனால் கீர்த்தி சுரேஷ்க்கும் அது பெரிதாக புகழைப் பெற்றுத் தரவில்லை. அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

ரஜினி முருகன் படம்:

ரஜினி முருகன் திரைப்படத்திலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். தொடர்ந்து அதற்கு பிறகு பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடரி மற்றும் பைரவா மாதிரியான திரைப்படங்களில் நடித்த பொழுது கீர்த்தி சுரேஷ் நடிப்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது.

அதை சரி செய்யும் விதமாக பிறகு நடிகையர் திலகம் என்கிற திரைப்படத்தில் முக்கிய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் திரைப்படம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே கீர்த்தி சுரேஷ் பெரிதாக கவர்ச்சி என்பதே காட்டியது கிடையாது. சில படங்களில் மாடல் ஆடைகள் போட்டு நடனமாடி இருந்தாலும் கூட அதிலும் பெரிதாக கவர்ச்சி என்பது இருக்காது.

ஓவர் கவர்ச்சி:

ஆனால் இப்பொழுது தெலுங்கு சினிமாவிற்கு சென்றதிலிருந்து அதில் மாற்றம் இருக்கிறது. தெலுங்கில் சர்க்காரி வாரிபட்டா மாதிரியான படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதற்கு நடுவே சமீபத்தில் ஃபிலிம் பேர் விருது நடந்தது.

அந்த விருதுக்கும் கவர்ச்சியான ஆடை அணிந்து வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ் இது அதிகமாக பேசப்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் அந்த ஆடையில் இருந்து போட்டோ வரை அனைத்திற்கும் யார் யார் உதவி செய்திருக்கின்றனர் என்று போட்டிருந்தார்.

கிட்டத்தட்ட முழுக்க முழுக்க விளம்பரத்திற்காகவே அந்த ஆடையை அணிந்து ஃபிலிம் ஃபேர் சென்று இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top