Connect with us

விஜயகாந்த் திருமணத்தை ராவத்தர் நிறுத்த இதுதான் காரணம்.. ஒரு இஸ்லாமியரா இருந்துக்கிட்டு இதை பண்ணியிருக்க கூடாது?!.

vijayakanth

Cinema History

விஜயகாந்த் திருமணத்தை ராவத்தர் நிறுத்த இதுதான் காரணம்.. ஒரு இஸ்லாமியரா இருந்துக்கிட்டு இதை பண்ணியிருக்க கூடாது?!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து மக்கள் மத்தியில் மாறாத அன்பை பெற்றவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்தின் இளமை காலக்கட்டங்களில் பெரும்பாலும் அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்திருந்தன. விஜயகாந்த் தமிழ் சினிமாவிற்குள் வந்தப்போதே அவரது நண்பர் ராவத்தரையும் கூட்டிக்கொண்டுதான் வந்தார்.

இருவரும் ஒன்றாகவே சினிமாவில் உயரத்தை தொட்டனர். சொல்லப்போனால் ராவத்தர் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பராவார். எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர் என்றால் விஜயகாந்தின் சொந்த வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை கூட ராவத்தர்தான் எடுப்பார்.

Vijayakanth
Vijayakanth

இந்த நிலையில் விஜயகாந்தின் கல்யாண விஷயத்தில் இப்ராஹிம் ராவத்தரின் பங்கு முக்கியமானது ஆகும். எவ்வளவோ பெரிய பெரிய தொழிலதிபர்கள் அப்போது விஜயகாந்திற்கு தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தனர்.

ஆனால் அதற்கு ராவத்தர் ஒப்புக்கொள்ளவில்லை. அதே போல நடிகை ராதிகாவை விஜயகாந்த் திருமணம் செய்ய இருந்தப்போது ராவத்தர் அதை தடுத்துவிட்டதாக அப்போது ஒரு பேச்சு உண்டு. ராதிகா கதாநாயகி என்பதால்தான் ராவத்தர் அவரை விஜயகாந்த் திருமணம் செய்துக்கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

vijayakanth-2
vijayakanth-2

ஆனால் உண்மையில் ராவத்தருக்கு அதிகமாக ஜாதகம் மீது நம்பிக்கை உள்ளதாம். விஜயகாந்திற்கு ஒரு ஜாதகம் பொருந்தவில்லை என்றால் அது உலக அழகியாகவே இருந்தாலும் ராவத்தர் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த காரணத்தால்தான் ராதிகாவை விஜயகாந்த் திருமணம் செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஒரு இஸ்லாமியராக இருந்தும் ஜாதகம் ஜோசியம் மேல் எல்லாம் ராவத்தர் நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.

To Top