ஜோதிகாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை? மும்பை போக இதுதான் காரணம்.. உண்மையை கூறிய சூர்யா.!

நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் தொடர்பான சில விஷயங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

நடிகர் சூர்யா இரண்டாம் தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். அவரது தந்தையான சிவகுமாரும் சினிமாவில் பெரிய நடிகராக இருந்து வந்தவர் ஆவார்.

நடிகர் சிவகுமாரின் விருப்பம் இல்லாமல்தான் சூர்யா ஜோதிகாவின் திருமணம் நடந்ததாக இப்போதும் ஒரு பேச்சு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு தகுந்தார் போல சமீபத்தில் ஜோதிகா, சூர்யா மற்றும் இவர்களின் குழந்தைகள் அனைவருமே மும்பைக்கு சென்று அங்கு செட்டிலாகிவிட்டனர் எதற்காக தனது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு சூர்யா தனியாக மும்பையில் சென்று தனது குடும்பத்துடன் செட்டில் ஆனார் என்பது ஒரு கேள்வியாக இருந்து வந்தது.

surya jyothika
surya jyothika
Social Media Bar

ஜோதிகா பிரிந்து செல்ல காரணம்:

இதற்கு பதில் அளித்த சூர்யா சமீபத்தில் சில விஷயங்களை விவரித்து இருந்தார். அதில் அவருக்கு கூறும் பொழுது ஜோதிகாவிற்கு அவரது தாய் தந்தையுடன் இருக்க வேண்டும் என்பது பல நாட்களாகவே ஆசையாக இருந்தது.

திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் தன்னுடைய தாய் தந்தையருடன் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் மட்டும் இருக்கக் கூடாது என்பது எந்த வகையில் சரி என்று எனக்கு தெரியவில்லை எதற்கு பெண்கள் மட்டும் எப்பொழுதும் விஷயங்களை இழப்பவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் மும்பையில் சென்று இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் சூர்யா.

ஆனால் இதற்குள்ளாகவே ஜோதிகாவுக்கும் சிவக்குமாருக்கும் இடையே சண்டை அதனால்தான் ஜோதிகா மும்பைக்கு சென்றுவிட்டார் என்று ஒரு செய்தி பரவ துவங்கிவிட்டது.