Connect with us

மக்கள் கொடுத்த மனுவை படித்ததுதான் காரணம்.. 12 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்களா? சம்பவம் செய்த தளபதி விஜய்!.

vijay

News

மக்கள் கொடுத்த மனுவை படித்ததுதான் காரணம்.. 12 மணி நேரத்தில் இவ்வளவு உறுப்பினர்களா? சம்பவம் செய்த தளபதி விஜய்!.

Social Media Bar

Actor Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. விஜய் ஒரு நடிகர் என்பதால் அவர் செய்யும் ஒவ்வொரு அசைவுகளும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி விடுகின்றன. இதனால் அவர் விளம்பரமே செய்ய தேவையில்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மக்களும் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வாக தனது கட்சியில் 2 கோடி நபர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளார் விஜய். அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மைகள் செய்வார் என்று இப்போதே பலரும் விஜய்யை நம்ப துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நடந்த பாலியல் படுக்கொலை குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் விஜய். இது இல்லாமல் சென்னையில் சில பகுதிகளில் வீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார் விஜய் என கூறப்படுகிறது.

vijay-3
vijay-3

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதால் இப்பொழுதே அவருக்கு நிறைய மனுக்கள் வர துவங்கியுள்ளன. அதில் பெரும்பாலான மனுக்களில் தங்களுக்கு நல்ல வீடு இல்லை என்பதே மக்களுக்கான கவலையாக இருக்கிறது. இதை பார்த்த விஜய் இலவச வீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி இலவசமாக மக்களுக்கு வீடுகளை கட்டி தருகிறார். இதற்காக யாரும் ஒரு ரூபாய் கூட கொடுக்க தேவையில்லை. இதற்கு நடுவே நேற்று விஜய் தனது கட்சியில் சேருவதற்கான இணைய லிங்கை சேர்த்திருந்தார். அதன் மூலமாக யார் வேண்டுமானாலும் விஜய் கட்சியில் சேரலாம்.

இந்த நிலையில் லிங்க் வெளியிட்டு 12 மணி நேரத்தில் 35 லட்சம் நபர்கள் இதில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒரு ஆரம்ப நிலை கட்சியில் 12 மணி நேரத்தில் இவ்வளவு பேர் சேருவது மிக அதிகம் என கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top