Cinema History
இயக்குனரே மறுத்தும் கவிஞர் வாலி உள்ளே கொண்டு வந்த பாடகர்!.. யார் தெரியுமா?..
கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர் ஆவார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறையை சேர்ந்த ரசிகர்களுக்கு பாடல் வரிகள் பிடிக்கும் வகையில் எழுதியவர் கவிஞர் வாலி.
எம்.ஜி.ஆர், சிவாஜியில் துவங்கி, அஜித்,விஜய் வரைக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார் வாலி. சினிமாவில் பலரும் பல முக்கிய பிரபலங்களை அறிமுகப்படுத்தியிருப்பர். அப்படி வாலியும் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒருமுறை வாலிக்கு தெரிந்த நபர் ஒருவர் ஒரு பையனை அழைத்து வந்தார். இவர் நன்றாக பாடுவார். இவர் பாடுவதை கேட்டு பாருங்கள் என கூறியுள்ளார். அப்போது டி.ஆர் சுந்தரம் என்கிற இயக்குனரின் படத்தில் வாலி வேலை செய்து கொண்டிருந்ததால் அந்த இயக்குனரும் இருந்தார்.
அப்போது அந்த பையன் அவர்கள் இருவருக்கும் பாடல் பாடி காட்டினான். வாலிக்கு அவன் பாடுவது பிடித்திருந்தது. ஆனால் இயக்குனருக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. இருந்தாலும் வாலிக்கு அந்த பாடகரை பிடித்திருந்ததால் இயக்குனர் அவரை ஏற்றுக்கொண்டார்.
அவர் வேறு யாருமில்லை. பிறகு சினிமாவில் பெரும் உயரங்களை தொட்ட கே.ஜே. ஜேசுதாஸ்தான் அந்த பாடகர். இந்த நிகழ்வை கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
