ஏன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆளை மாத்தீட்டிங்க!.. தேவா செயலால் கோபமான எஸ்.பி.பி!..

தமிழ் திரையுலக பாடகர்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக எஸ்.பி.பி பார்க்கப்படுகிறார். அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. எஸ்.பி.பி சிறப்பான குரல் வளம் கொண்டவர். தமிழ் சினிமாவில் ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் தொட்டே எஸ்.பி.பியின் குரலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

அதையும் தாண்டி அவரது பாடல்களில் சில இடங்களில் உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்துவார் எஸ்.பி.பி. இதனால் தமிழ் சினிமாவில் எஸ்.பி.பி குரலுக்கு என தனி வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ரஜினிக்கும் எஸ்.பி.பிக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக ரஜினி நடிக்கும் அதிக படங்களில் எஸ்.பி.பிதான் பாடினார். இறப்பதற்கு முன்பாக தமிழில் தனது கடைசி பாடலையும் கூட ரஜினிகாந்த் நடித்த அண்ணத்த திரைப்படத்திற்காகதான் பாடியிருந்தார் எஸ்.பி.பி. இந்த நிலையில் அண்ணாமலை படத்தில் அனைத்து பாடல்களையுமே எஸ்.பி.பி பாடுவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

Social Media Bar

அந்த சமயத்தில் தேவாவை சந்தித்த ஏசுதாஸ் தனக்கும் ஒரு பாடல் பாடுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுள்ளார். அவருக்கு உதவ நினைத்த தேவா படத்தில் வரும் ஒரு பெண் புறா என்கிற பாடலை பாடுவதற்கான வாய்ப்பை பெற்று தந்தார்.

இந்த விஷயம் எப்படியோ எஸ்.பி.பிக்கு தெரிந்துவிட “அது என்ன ஒரு பாட்டு பாட மட்டும் ஆளை மாற்றிவிட்டீர்களே என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தேவா., ஐயா ஒரு பாட்டு மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என மாத்தினேன் என கூறியுள்ளார் தேவா.

அப்போதும் எஸ்.பி.பி விடுவதாக இல்லை. அதே பாடலை தேவா வேறு மொழியில் இசையமைத்தப்போது அதற்கு எஸ்.பி.பிதான் பாடியுள்ளார்.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.