Tamil Cinema News
எங்களை பேசுற நீங்க சரியா இருக்கீங்களா?.. விக்னேஷ் சிவன் செஞ்ச விஷயம் தெரியுமா?.. நயன்தாராவால் கடுப்பான பத்திரிக்கையாளர்கள்..
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகையாக இருந்து வருகிறார்.அதே சமயம் தொடர்ந்து அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
சமீபகாலமாக நயன்தாரா மற்றும் தனுஷ் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வந்தது. நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா பயன்படுத்தியதற்காக அவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இது குறித்து நிறைய பேர் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். அந்த வகையில் சினிமா பத்திரிகையாளர்களான வலைப்பேச்சு பிஸ்மி அந்தணன் போன்றோர் நடத்தி வரும் தங்களது யூ ட்யூப் சேனல்களிலும் இது குறித்து பேசி இருந்தனர்.
இந்நிலையில் இவர்களை குறித்து எதிர்மறையான விமர்சனங்களை நேற்று நயன்தாரா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தொடர்ந்து பணம் ஈட்டுவதற்காக அவர்கள் தன்னுடைய பெயரை பயன்படுத்துவதாகவும் மாதத்தில் 30 வீடியோ போட்டால் அதில் 20 வீடியோ நயன்தாரா பற்றி தான் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார் நயன்தாரா.
நயன்தாரா குறித்து பத்திரிக்கையாளர்கள்:
இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து இருக்கின்றனர் வலைப்பேச்சு குழுவினர். அவர்கள் கூறும் பொழுது சினிமாவில் நடக்கும் உண்மைகளை தான் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். ஒரு நடிகை தயாரிப்பாளருக்கு எவ்வளவு சிரமம் கொடுக்கிறார் என்பது எங்களுக்கு திரைப்பட குழுவினர் மூலமாக தெரிகிறது.
ஓ2 என்கிற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கும் பொழுது தனது முகத்தின் மீது சேறு கூட படக்கூடாது என்று கண்டிஷன் போட்டதை அந்த படத்தின் உதவி இயக்குனரே எங்களிடம் கூறினார். அதற்குப் பிறகுதான் அவற்றை நாங்கள் பேசினோம்.
அதேபோல தனுஷ் நயன்தாரா பிரச்சனையிலும் தனுஷ் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரிந்தது. அதனால் நாங்கள் தனுஷ்க்கு ஆதரவாக பேசினோம் இது எல்லாம் நயன்தாராவை பெரிதாக பாதித்திருக்கிறது.
பாடி ஷேமிங் போன்ற விஷயங்களை அதிகமாக அனுபவித்து இருக்கிறேன் என கூறும் நயன்தாரா எங்களை குரங்கு என்று பாடி ஷேமிங் செய்து பேசியிருக்கிறார். அதேபோல விக்னேஷ் சிவன் நிறைய முறை எங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார்தான். ஆனால் அவருடைய அப்ரோச் சரியில்லாத காரணத்தினால் நாங்கள் தான் நிராகரித்துவிட்டோம். என்று விளக்கி இருக்கின்றனர் வலைப்பேச்சு குழுவினர். இந்த நிலையில் இது ட்ரெண்டாக தொடங்கி இருக்கிறது.