Connect with us

பிரதீப்பை தூக்குனது பெரிய ப்ளான்… அதுக்குதான் மாயா கேங் இப்ப அனுபவிக்குது!.. ஓப்பன் டாக் கொடுத்த யுகேந்திரன்!..

pradeep yugendran

Tamil Cinema News

பிரதீப்பை தூக்குனது பெரிய ப்ளான்… அதுக்குதான் மாயா கேங் இப்ப அனுபவிக்குது!.. ஓப்பன் டாக் கொடுத்த யுகேந்திரன்!..

Social Media Bar

பிரதீப்பை பிக்பாஸில் இருந்து எலிமினேசன் செய்தது முதலே சமூக வலைத்தளங்களே மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஏனெனில் பெண்களின் பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிதான் பிரதீப்பிற்கு எலிமினேஷன் கொடுக்கப்பட்டது.

அதுவும் கமல்ஹாசனே அந்த எலிமினேஷனை வழங்கினார். ஆனால் அது திட்டமிடப்பட்ட சதி என பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன. இதுக்குறித்து யுகேந்திரன் தனது பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது பிரதீப் ஒரு சிறப்பான போட்டியாளராக இருந்தான். கண்டிப்பாக அவன் தான் ஜெயிப்பான் என்று நான் நினைத்தேன்.

pradeep
pradeep

ஆனால் இங்கு இருக்கும் பெண்கள் எல்லாம் ப்ளான் பண்ணி அவனை வெளியே அனுப்பிவிட்டனர். நான் அவனுடன் நன்றாக பழகியுள்ளேன். அதிகமாக கெட்ட வார்த்தை பேசும் மக்கள் வாழும் சூழலில் வாழ்ந்தவன் பிரதீப். எனவே அவனுக்கு கெட்ட வார்த்தை என்பது சகஜமாகவே வந்துவிடுகிறதே தவிர வேறு எந்த தவறும் அவன் தவறு செய்தது கிடையாது.

உடல் ரீதியாக எந்த ஒரு அச்சுறுத்தலையும் பிரதீப் ஏற்படுத்துவது கிடையாது. அவன் அப்படிப்பட்ட கேரக்டரும் கிடையாது. இவர்கள் கூடி அவனை விரட்டி விட்டதற்குதான் இப்போது அர்ச்சனா வந்து அவர்களை கடுப்பேற்றி கொண்டிருக்கிறார்.

அர்ச்சனாவும், விசித்ராவும் ஒன்றிணைந்து தற்சமயம் பிக்பாஸ் வீட்டையே கடுப்பேற்றி வருகின்றனர். இதனால் பிரதீப்பை விரட்டிய மாயாவின் குழு செம கடுப்பில் இருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார் யுகேந்திரன்!..

To Top