News
இனிமே இந்த பக்கமே வரக்கூடாது!.. யுவனை விரட்டிய தளபதி ரசிகர்கள்!.. அதுக்குன்னு இப்படியா!.
தமிழ் சினிமாவில் வெற்றி படங்கள் கொடுத்த இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர். என்னதான் இளையராஜாவின் மகனாக இருந்தாலும் தனக்கென இருக்கும் தனி திறமையை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
பொதுவாக யுவன் சங்கர் ராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் நல்ல வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் சமீபத்தில் அது கொஞ்சம் சறுக்கல்களை சந்தித்துள்ளது. விஜய் நடிப்பில் ஏற்கனவே புதிய கீதை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அந்த படத்தில் அத்தனை பாடல்களும் ஹிட் கொடுத்தப்போதும் கூட படம் வெற்றியடையவில்லை. எனவே யுவன் விஜய் காம்போ சரிப்பட்டு வராது என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர் தளபதி ரசிகர்கள். இந்த நிலையில் வெகு காலங்களுக்கு பிறகு கோட் திரைப்படத்தில் யுவன் விஜய்யுடன் காம்போ போட்டிருப்பது யுவன் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் படத்தின் ஃபர்ஸ் சிங்கிள் அந்த ஆர்வத்திற்கு ஏற்ப இருக்கவில்லை. விஜய் ரசிகர்கள், யுவன் ரசிகர்கள் இருவருக்குமே அந்த பாடல் பிடிக்கவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் யுவனை விமர்சிக்க துவங்கிவிட்டனர். இன்னும் சிலர் இதற்கு அனிரூத்தே தேவலாம் என்று பேசியுள்ளனர்.
இதனால் சில நாட்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் கணக்கையே மூடிவிட்டாராம் யுவன் சங்கர் ராஜா.கோட் திரைப்படம் வெளியாகும் வரை அவர் சமூக வலைத்தளம் பக்கம் வருவதாக இல்லை என கூறப்படுகிறது.
