News
அட படுபாவிகளா!.. என்ன வேலையா பார்த்து வச்சிருக்கீங்க!.. யுவன் சங்கர் ராஜாவால் ஆடிப்போன சிம்பு..!
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போதும் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் சிம்பு திரைப்படங்களுக்கு ஒழுங்காக நடிக்க வருவதில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.
இதனாலேயே நிறைய திரைப்பட வாய்ப்புகளை இழந்தார் நடிகர் சிம்பு. இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கூட சரவணா திரைப்படத்தை இயக்கும்போது இதே அளவிலான பிரச்சனையை கண்டதாக தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சிம்பு இவர்கள் எல்லாம் ஒரே கேங் என கூறலாம். இந்த நிலையில் மன்மதன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

மன்மதன் திரைப்படத்தில் தனது காதலி வேறு ஒரு நபருடன் உல்லாசமாக இருப்பதை பார்த்த சிம்பு அந்த காதலியிடம் பேச வருவதாக ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சிக்கு இசையமைக்கும்போது வேண்டுமென்றே ஒரு காமெடி இசையை வைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
அதை வந்து பார்த்த சிம்பு அந்த காட்சியில் அப்படி ஒரு காமெடி இசை வருவதை பார்த்ததும் அதிர்ச்சியாகி நாற்காலியில் இருந்து எழுந்து குதித்துள்ளார். இந்த நிகழ்வை யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
