யுவன் இயக்கிய படத்தில் வெங்கட்பிரபுதான் ஹீரோ!.. என்னப்பா சொல்றீங்க!..
Yuvan Shankar raja: சிறு வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. சும்மா ஜாலிக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் அலையை கிளப்பின.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு இணையான ஒரு இசையமைப்பாளர் வந்துவிட்டார் என அப்போதே பலரும் பேசினர். யுவன் சங்கர் ராஜா சினிமாவிற்கு வந்து வெகு காலங்கள் கழித்தே கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு சினிமாவிற்கு அறிமுகமானார்.
முதலில் சினிமாவிற்கு வந்தப்போது இயக்குனர் பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார் வெங்கட்பிரபு. சிவகாசி திரைப்படத்தில் கூட வைரம் என்கிற தங்கை கதாபாத்திரத்தின் கணவராக இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு சென்னை 28 என்கிற திரைப்படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு.

வெங்கட்பிரபுவும் அவரது குடும்பத்தாருமே மிகவும் ஜாலியான ஒரு கூட்டணி என கூறலாம். தமிழ் சினிமாவில் எந்த ஒரு பேட்டியில் இவர்களை பார்த்தாலும் மிகவும் வெளிப்படையாக பேட்டியளிப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்த கதையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு கூறும்போது என் தந்தை கங்கை அமரன் என்னை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கினார். அதே போல யுவன் சங்கர் ராஜா அப்போதெல்லாம் சின்ன சின்ன படங்கள் எடுப்பான் அதில் எல்லாம் நான்தான் கதாநாயகனாக நடித்தேன். பிரேம் ஜி இயக்கும் படங்களிலும் நாந்தான் ஹீரோ.
எனவே அப்போது எங்கள் வீட்டில் யார் படம் எடுத்து பயில வேண்டும் என்றாலும் அதில் நாந்தான் ஹீரோவாக இருப்பேன் என கூறியுள்ளார் வெங்கட்பிரபு.