Connect with us

தமிழில் எடுக்கப்பட்ட உலகப்படம் – உலகம் முழுக்க எடுத்தாலும் தமிழ் அளவுக்கு இல்ல? – எந்த படம் தெரியுமா?

Cinema History

தமிழில் எடுக்கப்பட்ட உலகப்படம் – உலகம் முழுக்க எடுத்தாலும் தமிழ் அளவுக்கு இல்ல? – எந்த படம் தெரியுமா?

இலக்கியங்களை படமாக எடுப்பது என்பது சினிமா வரலாற்றில் காலம் காலமாக உள்ள விஷயம்தான். தமிழ் சினிமாவின் ஆரம்பக்கட்டத்தில் ஜெயகாந்தனின் பல நாவல்கள், சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் வந்துள்ளன.

இப்போதும் கூட பரதேசி, விசாரணை, பொன்னியின் செல்வன் அனைத்தும் நாவலை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களே. இதே போல உலக அளவில் பிரபலமாக இருக்கும் நாவல் வெண்ணிற இரவுகள். ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி என்கிற எழுத்தாளர் இந்த கதையை எழுதினார்.

ஒரு காதல் கதை என்றாலும் உலகம் முழுவதும் க்ளாசிக் ரக இலக்கியங்களாக பார்க்கப்படும் நாவல்களில் வெண்ணிற இரவு முக்கியமான நாவல். இந்த நாவலின் கதையை உலகம் முழுவதும் பல மொழிகளில் படமாக எடுத்தனர்.

இத்தாலி,பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி இந்தியாவில் ஹிந்தியில் கூட எடுத்தனர். பல முறை எடுக்கப்பட்டாலும் குறிப்பிட்டு சில படங்கள் மட்டுமே அவற்றில் சிறப்பாக அமைந்தன.

அப்படியாக வெண்ணிற இரவுகள் கதையை கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் இயற்கை. இயற்கை படத்தில் ஷியாம், அருண் விஜய், நடிகை ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்தனர்.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார். 21 நவம்பர் 2003 அன்று இந்த படம் வெளியானது. அந்த படம் வெளியாகி 19 வருடம் ஆகிவிட்டது. அதை நினைவு கூறும் விதமாக சமூக தளங்களில் கடந்த 21 ஆம் தேதி இயற்கை படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top