News
கேரளாவில் நடக்கும் 27 வது சர்வதேச திரைப்பட விழா.! – ரிஜிஸ்ட்ரேஷன் நாளை துவங்குகிறது.
உலகம் முழுவதும் எடுக்கப்படும் திரைப்படங்களை ஒளிப்பரப்பும் விஷேச நிகழ்ச்சியாக சர்வதேச திரைப்பட விழா உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கோவா போன்ற குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது.

வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் கேரளாவில், திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். போன வருடம் கொரோனா காரணமாக தேதி மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான 27வது சர்வதேச திரைப்பட விழாவானது வருகிற டிசம்பர் 9 முதல் 16 வரை நடக்க இருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த பல்வேறு படங்கள் இதில் திரையிடப்படும்.
விழாவிற்கு ரிஜிஸ்டர் செய்து ஐடி பெற்றவர்கள், இந்த குறிப்பிட்ட நாட்களில் சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள திரையரங்குகளில் எத்தனை திரைப்படங்கள் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

நாளை 11.11.2022 அன்று காலை 10 மணிக்கு சர்வதேச திரைப்பட விழாவிற்கான ரிஜிஸ்ட்ரேஷன் துவங்க உள்ளது. போன வருடம் வரை சாதரணமாக ரிஜிஸ்டர் செய்பவர்களுக்கு 1,000 ரூபாயும், மாணவர்களுக்கு 500 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
இந்த வருடம் ரிஜிஸ்டர் கட்டண தொகை எவ்வளவு இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை. https://registration.iffk.in/ இந்த லிங்கின் வழியாக சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரிஜிஸ்டர் செய்யலாம்.
மேலதிக தகவல்களுக்கு https://www.iffk.in/ என்ற இணையதளத்தை அணுகவும்.
