Tamil Cinema News
2கே கிட்ஸை கலாய்க்கும் சுசீந்திரன்.. வைரலாகி வரும் 2கே லவ் ஸ்டோரி ட்ரைலர்.!
தமிழில் வரவேற்பை பெறும் வகையில் வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இயக்குனர் சுசீந்திரன். பெரும்பாலும் இயக்குனர் சுசீந்திரன் திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
இவர் இயக்கிய பாண்டியநாடு, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்கள் எல்லாமே தமிழில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றன. பெரும்பாலும் அவர் இயக்கிய நிறைய திரைப்படங்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.
ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது இயக்கத்தில் வரும் நிறைய படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் தற்சமய 2கே லவ் ஸ்டோரி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
வழக்கமாக பொது புத்தியில் எப்படி இப்போது இருக்கும் தலைமுறையின் காதல்கள் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதோ அதே போலதான் இந்த படத்தின் கதைக்களமும் உள்ளது. எனவே இது இப்போதைய தலைமுறையினருக்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.