News
ஓ.டி.டி பிரச்சனையில் சிக்கிய 9 இயக்குனர்கள்!.. வீட்டுக்கு அனுப்பிய தயாரிப்பு நிறுவனம்!.
OTT Rights: 2022 கொரோனா பிரச்சனைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓ.டி.டி உரிமத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க துவங்கியது. கொரோனா சமயத்தில் திரையரங்குகள் இல்லாத காரணத்தால் புது படங்களை பார்ப்பதற்காக மக்கள் ஓ.டி.டி தளங்களை சப்ஸ்க்ரைப் செய்ய துவங்கினார்கள்.
இந்த நேரத்தில் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஓ.டி.டி நிறுவனங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியாகாமல் இருந்த திரைப்படங்களை வாங்கி தங்கள் தளங்களில் வெளியிட்டன. இந்த நிலையில் திரைப்படங்களுக்காக பெரும் தொகையை கூட கொடுக்க தயாராக இருந்தன ஓ.டி.டி நிறுவனங்கள்.
இந்த நிலையில் திரையரங்குகள் திறந்த பிறகும் கூட ஓ.டி.டி தளங்கள் நல்ல விலைக்கு திரைப்படங்களை வாங்கியதால் ஓ.டி.டி உரிமம் மூலமாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நல்ல தொகை கிடைக்க துவங்கியது. இதனை கணக்கு பண்ணி நடிகர்களும் தங்கள் சம்பளத்தை உயர்த்தினர்.
ஓ.டி.டியில் வந்த பிரச்சனை:
முக்கியமாக குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு படத்தின் பட்ஜெட்டை விடவும் அதிக தொகை ஓ.டி.டி உரிமத்தின் வழியாக கிடைத்தது. இதனை கண்டுக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் 9 புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் அநியாய விலைக்கு திரைப்படங்களை விற்பதை அறிந்த ஓ.டி.டி நிறுவனங்கள் இனி தேர்ந்தெடுத்துதான் திரைப்படங்களை வாங்க வேண்டும். அதுவும் குறைந்த விலைக்குதான் வாங்க வேண்டும் என மொத்தமாக முடிவெடுத்துள்ளது.
இதனை அறிந்த ட்ரீம் வாரியர்ஸ் அந்த இயக்குனர்களிடம் வேறு தயாரிப்பாளரை பார்த்துக்கொள்ளுமாறு கூறியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.
