Poet vaali : திரைத்துறையில் உள்ள கவிஞர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு அதே அளவிலான அங்கீகாரத்தை அவருக்கு பிறகு வாலிதான் பெற்றார். இவர் அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். மேலும் இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரும் கூட.
வாலி மிகவும் பிரபலமாக இருந்த காரணத்தினால் அவருக்கு அப்போது அதிகமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அப்போது பிரபல தயாரிப்பாளராக இருந்த ராம நாராயணனுக்கு வாலியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். எனவே அவர் தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு வாலியை பாடல் வரிகள் எழுத வைத்தார்.

கிட்டத்தட்ட ராம நாராயணன் 60க்கும் அதிகமான படங்களை இயக்கினார். அவை அனைத்திற்கும் வாலிதான் பாடல் வரிகளை எழுதினார். இந்த நிலையில் ஒரு விழாவில் வாலி பேசும்போது ராம நாராயணனுக்கு எல்லா இசையிலும் பாடல் வரிகள் எழுதி கொடுத்துவிட்டேன். இனி எழுதுவதற்கு ராகமே இல்லை என கூறினார்.
அப்போது அங்கு வந்த கலைஞருக்கு தெரிந்த நபர் ஒருவர் வாலியை கிண்டல் செய்து பேசிவிட்டார். இதனால் வாலிக்கு மன வருத்தம் உண்டானது. அதற்கு பிறகு கலைஞர் மு கருணாநிதி ஒரு படத்தின் பாடலுக்கு வரிகள் எழுதுவதற்காக வாலியை அழைத்து வர சொல்லி ஆள் அனுப்பினார். ஆனால் வாலி வரவில்லை.

இந்த நிலையில் அவருக்கு போன் செய்த கலைஞர், உங்கள் கோபம் நியாயமானதுதான். அவர் பேசியது தவறுதான் ஆனால் எனக்காக நீங்கள் இசையமைத்து தர வேண்டும் என கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து வாலி பாடல் வரிகளை எழுதி தந்துள்ளார்.
ஆனால் எம்.ஜி.ஆரும் இதே போல்தான் தன்னிடம் பேசுவார். அதே போலவே அன்று கலைஞர் பேசினார் என வாலி இதுக்குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.






