கமல்ஹாசனுக்காக தப்பான முடிவு எதுவும் எடுத்திடாதீங்க!.. பிரகாஷ் ராஜ்க்கு இயக்குனர் கொடுத்த அட்வைஸ்

Kamalhaasan and Prakash raj : தமிழ் சினிமா வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு நடிகராக தனது கால்தடத்தை பதித்திருக்கும் முக்கியமான நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். சிவாஜி கணேசனை போலவே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் இறங்கி நடிக்க கூடியவர் கமல்ஹாசன்.

அவர் நடித்த மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்த போதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி இருப்பார் கமல்ஹாசன்.

Social Media Bar

பொதுவாக கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் பலருக்கும் இருக்கும் ஆசையாகும். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜிற்கும் கூட கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க ஆசை இருந்தது. இந்த நிலையில்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திற்கான பேச்சுக்கள் போய் கொண்டிருந்தது.

சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்றே முடிவாகி இருந்தது. மற்றபடி மற்ற கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து சரண் முடிவே எடுக்கவில்லை. இந்த நிலையில் அவரை சந்தித்த பிரகாஷ் ராஜ், அந்த டீன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

ஏற்கனவே வெகு காலங்களாக சரணிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் பிரகாஷ் ராஜ். எனவே அவருக்கு பதிலளித்த சரண் கமல்ஹாசனுடன் நடிப்பதற்காக தப்பான முடிவு எதுவும் எடுக்காதீங்க. உங்களை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நானே ஒரு படம் எடுக்குறேன் என கூறியுள்ளார்.

ஆனால் பிரகாஷ் ராஜ் அந்த கதாபாத்திரம் தன்னை அதிகமாக பிரபலப்படுத்தும் என நம்பினார். எனவே அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். அதே போலவே படம் வெளியான பிறகு பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் வெகுவாக பிரபலமானது.