அந்த பாட்டை எடுத்துட்டா நல்லா இருக்கும்!.. தயாரிப்பாளரே சொல்லியும் தனுஷ் படத்தில் நீக்கப்படாத பாடல்!. கடைசியில் அதான் ஹிட்டு!.

தமிழில் தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். மற்ற கதாநாயகர்களை போல வெறும் சண்டை படங்கள் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார்.

அவர் நடித்த தங்க மகன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் பெரிதாக சண்டை காட்சிகளே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். தற்சமயம் இவர் கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கிறது.

 தனுஷ் நடிப்பில் ஆரம்பத்தில் வந்த படங்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இருந்தது. அந்த சமயத்தில் தனுஷை பெரிதாக உயர்த்திய திரைப்படம் திருடா திருடி. இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனரான சுப்ரமணிய சிவா ஒரு பேட்டியில் கூறும் பொழுது திருடா திருடி படத்தில் மன்மத ராசா பாடலை வைப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்ததாக கூறியுள்ளார்.

Social Media Bar

மன்மத ராசா பாடலை எடுக்க வேண்டும் என்கிற ஐடியாவையே முதலில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தயாரிப்பாளர் முதல் படக்குழு வரை அனைவருமே அந்த பாடல் வைத்தால் நன்றாக இருக்காது என்று கூறி வந்தனர்.

மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது, ஆனால் பாடல் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது. அப்பொழுதும் நான் கூறினேன் அந்த பாடல் நன்றாக இருக்கும் என்று,  இருந்தாலும் தயாரிப்பாளருக்கு அதில் உடன்பாடு இல்லை ஆனால் என்னுடைய விருப்பத்திற்காக அந்த பாடலை எடுக்க விட்டார்.

அதை எடுத்து வெளியிட்ட பிறகு திருடா திருடி படத்திற்கு ஒரு விளம்பரமாக அந்த பாடல்தான் அமைந்தது. பட்டி தொட்டி எங்கும் வெற்றி அடைந்தது அந்த பாடல் என்று கூறியுள்ளார் இயக்குனர் சுப்பிரமணிய சிவா.