Bigg boss tamil Cool Suresh: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு போட்டியாளராக கூல் சுரேஷ் இருந்து வருகிறார். பிக்பாஸ் துவங்கியப்போது அதை மிகவும் கேளிக்கையாக கொண்டு சென்ற பெருமை கூல் சுரேஷையே சேரும்.
கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் இவ்வளவு காலம் இருந்தும் கிடைக்காத அங்கீகாரம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வழியாக கிடைத்துவிட்டது என கூறலாம். இந்த நிலையில் 70 நாட்களை கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருப்பதே கூல் சுரேஷிற்கு கடினமான விஷயமாக மாறிவிட்டது. எனவே வீட்டை விட்டே செல்ல முடிவெடுத்தார்.

எப்போதுமே சண்டையாக இருக்கும் வீட்டில் இருப்பதற்கு ஒருவருக்கு எப்படி பிடிக்கும். இந்த நிலையில் ஆவேசமான கூல் சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் ஷெட்டில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் அவரை அழைத்து அவருக்கு அறிவுரை கூறினார் பிக்பாஸ்.
இருந்தாலும் தன்னை வெளியேற்ற உதவவும் என கேமிரா முன்பு மக்களிடம் கோரிக்கை வைத்தார் கூல் சுரேஷ். இதனையடுத்து மக்கள் இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றே கூற வேண்டும். கூல் சுரேஷ் இந்த வாரம் எலிமினேஷன் ஆகிறார்.
பொதுவாக எலிமினேஷன் என்பது போட்டியாளர்களுக்கு வருத்தமாக இருக்கும். ஆனால் கூல் சுரேஷிற்கு இது மகிழ்ச்சியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.