Kannadasan : படத்துல இல்லாததை எல்லாம் எதுக்குங்க எழுதுரீங்க!.. கண்ணதாசன் விளக்கத்தால் அதிர்ச்சியடைந்த இயக்குனர்!..
Poet Kannadasan : கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு பாடலாசிரியர் ஆவார். எந்த ஒரு கடினமான பாடல் வரிக்கும் சிறிது நேரத்திலேயே நல்ல கருத்துக்களுடன் கூடிய பாடல் வரிகளை எழுதி கொடுத்து விடுவார் கண்ணதாசன்.
இதற்காக கண்ணதாசன் தமிழில் நல்ல புலமை பெற்றிருந்தார். தமிழில் பலருக்கும் தெரியாத சொல் கூட அவருக்கு தெரியும். எனவே ஒரு பாடலுக்கு அவர் வரிகள் எழுதுகிறார் என்றால் அந்த வரியின் அர்த்தம் என்னவென்று அதை கேட்பவர்களாலேயே எளிதில் கண்டுப்பிடிக்க முடியாது.
இதனால் அர்த்தம் புரியாமல் அவர்களிடம் கேள்வி கேட்பவர்கள் உண்டு. அப்படி ஒரு சம்பவம் பாதக்காணிக்கை திரைப்படத்திலும் நடந்தது. நடிகர் ஜெமினி கணேசன், சாவித்திரி, விஜயக்குமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் அனைத்து பாடல்களுக்கும் கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதினார். அப்படி அவர் பாடல் வரி எழுதிய ஒரு துக்க பாடல் எட்டு அடுக்கு மாளிகை என துவங்கியது. அந்த பாடல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. அதிகப்பட்சம் சாவு வீடுகளில் அந்த பாடலை போட்டு வந்தனர்.
ஆனால் அந்த பாடலை கண்ணதாசன் எழுதும்போதே படத்தின் இயக்குனர் கே.சங்கருக்கு ஒரு ஐயம் எழுந்தது. ஆனால் அப்போது அவர் அதை கேட்கவில்லை. அதன் பிறகு படத்தின் வெற்றி விழா நடந்தப்போது அந்த சந்தேகத்தை கேட்டே ஆக வேண்டும் என முடிவு செய்த இயக்குனர் கண்ணதாசனை தனியாக அழைத்தார்.
படத்தில் ஜெமினிகணேசன் பெரும் பணக்காரர்தான், ஆனால் எங்கேயுமே படத்தில் எட்டடுக்கு மாளிகை வரவில்லையே பிறகு எதற்கு அப்படி ஒரு வரியை பாடலில் வைத்தீர்கள் என கேட்டுள்ளார் இயக்குனர். அதற்கு பதிலளித்த வாலி நம் உடலை சாண் கொண்டு அளந்தால் 8 சாண்தான் வரும். அதை குறிப்பிடும்ப்படியே அந்த வரிகளை வைத்தேன் என கூறியுள்ளார் கண்ணதாசன்.
அந்த சின்ன வரிகளுக்கு பின்னால் இவ்வளவு பெரிய அர்த்தம் உள்ளதா என ஆச்சரியமாக பார்த்துள்ளார் இயக்குனர்.