Poet vaali: தமிழ் திரைப்பட கவிஞர்களில் கண்ணதாசனுக்கு பிறகு அனைவராலும் வெகுவாக போற்றப்படும் கவிஞராக வாலி பார்க்கப்படுகிறார். கண்ணதாசனுக்கு பிறகு நிறைய புது கவிஞர்கள் சினிமாவிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரும் வாலி அளவிற்கு கவிதைகளை எழுதிவிடவில்லை.
அந்த அளவிற்கு சிறப்பான பாடல் வரிகளை வாலி அளித்துள்ளார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் வாலி மிகவும் கஷ்டப்பட்டார். ஏனெனில் அப்போதெல்லாம் ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது சிரமமான விஷயமாக இருந்தது.
இதனால் வாலி சிரமப்பட்டுதான் பாடல் வரிகளுக்கான வாய்ப்பை பெற்றார். எடுத்த உடனே முழு படத்திற்கும் பாடல் வரிகள் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் பாடல் வரி எழுத வாய்ப்பு கிடைத்தது.

அதிலேயே சிறப்பான பாடல் வரிகளை எழுதியிருந்தார் வாலி. வாலியின் இந்த திறனை கண்டு திரைத்துறையினர் வாய்ப்பு கொடுக்க துவங்கினர். இதுக்குறித்து வாலி ஒரு பேட்டியில் கூறும்போது உண்மையில் ஜெமினி கணேசன் நடித்த கற்பகம் திரைப்படம்தான் எனக்கு முதல் படம்.
அந்த படத்தில்தான் நான் அனைத்து பாடல்களுக்குமே வரிகள் எழுதினேன். அந்த படம் 100 நாள் வரை ஓடியது. மேலும். அந்த படத்திற்காக கண்ணதாசனே எனக்கு விருது கொடுத்தார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம் என கூறியுள்ளார் வாலி.