Connect with us

வழக்கமான ஏலியன் படம்தானா!.. அயலான் படம் எப்படி இருக்கு… முழு விமர்சனம்…

ayalaan

Latest News

வழக்கமான ஏலியன் படம்தானா!.. அயலான் படம் எப்படி இருக்கு… முழு விமர்சனம்…

cinepettai.com cinepettai.com

Ayalaan Movie Review: பொதுவாக ஏலியன் திரைப்படங்கள் என்றாலே அதில் ஒரே மாதிரியான கதைகளம்தான் அமைந்திருக்கும். அயலான் திரைப்படத்தை பொருத்தவரை இது தமிழில் வரும் முதல் பிரமாண்டமான ஏலியன் திரைப்படம் ஆகும். இதற்கு முன்பு ஏலியன் தொடர்பான சில திரைப்படங்கள் வந்திருந்தாலும் கூட அவை குறைந்த பட்ஜெட்டில் சின்ன நடிகர்கள் நடித்து தான் வந்திருக்கின்றன.

பெரும் நடிகர் நடித்து வரும் முதல் ஏலியன் திரைப்படமாக அயலான் இருக்கிறது. இது தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இயக்கி வந்தார் இந்த படத்தின் இயக்குனர் ஆர் ரவிக்குமார் படத்திற்கான பட்ஜெட் போன்ற பல விஷயங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு பல காலங்கள் ஆனது.

இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய பொழுதே இந்த இயக்குனர் இயக்கத்தில் படம் நடிக்க வேண்டும் என்ற முடிவு செய்துவிட்டார் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து இது இயக்குனருக்கு இரண்டாவது திரைப்படம்.

படக்கதை:

அயலான் திரைப்படத்தின் கதையைப் பொறுத்தவரை இது வழக்கமான ஏலியன் கதைதான் .பொதுவாகவே ஏலியன் திரைப்படங்கள் என்றால் வேற்று கிரகத்திலிருந்து வந்த ஏலியனுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கும் அதை கதாநாயகன் சரி செய்வான் அல்லது கதாநாயகனுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும் அதை வேற்று கிரகத்திலிருந்து வரும் ஏலியன் சரி செய்யும்.

இதில் இரண்டாவது ரகம் தான் அயலான் திரைப்படம்  மனிதர்கள் தொடர்ந்து பூமியை சிதைத்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. தங்கம், வைரம், பெட்ரோல் போன்ற கனிம வளங்களுக்காக தொடர்ந்து பூமியை தோண்டுவதும் பிளாஸ்டிக் புகை போன்ற மாசுக்கள் மூலமாக பூமியை கெடுப்பதும் மனித இனம் மட்டுமே செய்யும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

இப்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சதியால் பூமிக்கு மிக பெரும் பிரச்சனை வர இருக்கும் சமயத்தில் பூமியை காப்பதற்காக ஒரு வேற்று கிரகவாசி களமிறங்குவதாக கதை இருப்பதாக கூறப்படுகிறது. டிரைலரை பார்த்த பொழுதே இந்த கதை பலராலும் யூகிக்கப்பட்டு விட்டது.

ayalaan
ayalaan

ஆனால் அதனைத் தாண்டி திரைக்கதையாக இதை எப்படி கொண்டு சென்றிருக்கின்றனர் என்பதை பொறுத்து படத்தின் வெற்றி அமையும் அந்த வகையில் இந்த திரைப்படம் சிறப்பான  வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படம் துவங்கி இடைவேளை வரையிலுமே மக்களை திருப்திப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல இடைவேளை வரை காமெடி போன்ற சில விஷயங்களை கொண்டு முக்கிய கதையை நகர்த்தாமல் கொண்டு சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு முக்கிய கதைக்குள் திரைப்படம் வருகிறது இடைவேளைக்கு முன்பு இருந்த காமெடி காட்சிகளும் பெரிதாக மக்களை உறுத்தும் வகையில் இல்லாமல் நகைச்சுவையாகவே சென்றுள்ளது.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் பிரமாதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏலியனும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடத்தும் சண்டை காட்சிகள் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோ சண்டை காட்சிகளுக்கு நிகராக இருப்பதாக கூறப்படுகிறது எனவே அயலான் திரைப்படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top