இலங்கையில் விஜய்க்கு இருக்கும் ஆபத்து!.. வெங்கட்பிரபுவின் சூழ்ச்சிதான் காரணமா?

Thalapathy Vijay: லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்து இலங்கையில் நடக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இலங்கையில் ஒருவேளை இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் பட்சத்தில் அது விஜய்க்கு ஆபத்தாக முடியும் என்கிறார் பிரபல பத்திரிகையாளர் அந்தணன். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது தற்சமயம் இலங்கை ஒரு சூழ்ச்சியை செய்து வருகிறது.

தமிழ் பிரபலங்கள் யாராவது இலங்கைக்கு வந்தால் அவர்களுடன் இலங்கை அதிபர் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்கிறார். இதன் மூலமாக தமிழர்களுடன் தாங்கள் இணக்கமாக இருப்பதாகவும் இலங்கையில் இன்னும் இனவெறி பிரச்சனைகள் நடைபெறவில்லை என்றும் சுட்டிக்காட்ட நினைக்கின்றனர் இலங்கை அரசாங்க பிரதிநிதிகள்.

GOAT
GOAT
Social Media Bar

ஆனால் இப்படி தமிழ் பிரபலங்களுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொள்வது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சிங்களர்கள் மீது தமிழ் மக்களுக்கு ஒரு எதிர்ப்பு மனநிலையே இருக்கிறது எனும் பட்சத்தில் அவர்களுடன் தமிழ் பிரபலங்கள் போட்டோ எடுத்துக் கொள்வது அந்த பிரபலங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

அந்த வகையில் விஜய் தற்சமயம் இலங்கை செல்லும் பொழுது இலங்கை அதிபருடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை விஜய்யால் தவிர்க்க முடியாது. அப்படி எடுக்கப்படும் போட்டோ வெளியாகும் போது அது விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் ஆபத்தாக முடியும் விஜய் சிங்களர்களுக்கு ஆதரவான ஒருவர் என்கிற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் வர வாய்ப்பு இருக்கிறது எனவே இதற்கு வெங்கட்பிரபுவும் முக்கிய காரணம் என்று கூறுகிறார் அந்தணன்.