வெளிநாட்டுல வாங்குறதுக்கு எல்லாம் காசு இல்ல!.. நாமளே செஞ்சுடுவோம்… கங்குவா படத்துக்காக இயக்குனர் செய்த வேலை!..
Kanguva : பொதுவாகவே பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என்றாலே அது குறித்து மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு தானாகவே உருவாக்கிவிடும். ஏனெனில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் பிரம்மாண்டங்கள் அதிகமாக இருக்கும்.
அதை திரையரங்குகளில் பார்ப்பதற்கு மக்களிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படியாக சூர்யா நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் வெகு நாட்களாகவே எடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் தமிழில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனர் என சிறுத்தை சிவாவை கூறலாம். தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களை வைத்து நிறைய வெற்றி படங்களை இவர் கொடுத்திருக்கிறார்.

சூர்யாவை வைத்து வெளியாகும் முதல் திரைப்படம் கங்குவா திரைப்படம்தான் கங்குவா திரைப்படம் பழைய காலத்தில் நடக்கும் கதைகளை கொண்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்த படத்திற்கு ஏற்கனவே எக்கச்சக்கமாக செலவுகள் ஆகி உள்ளன. இந்த நிலையில் படத்தில் புகைமூட்டமான காட்சிகள் நிறைய படமாக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு வழக்கமாக புகை போக்கும் கருவி ஒன்றை தான் படங்களில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் வெளிநாட்டில் சிறுத்தை சிவா ஒருமுறை புதிதாக ஒரு கருவியை பார்த்தார்.
அதற்குள்ளாக ஐஸ் கட்டியை போட்டு வைத்தால் குளுகுளு புகையை அதுவே உருவாக்கி கொடுக்கும் கிட்டத்தட்ட ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் குளிரால் ஏற்படும் புகையை அந்த கருவி உருவாக்கி கொடுக்கும். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்தது இந்த நிலையில் அதன் தொழில்நுட்பத்தை கேட்டு தெரிந்து கொண்ட சிறுத்தை சிவா பிறகு தமிழ்நாட்டிற்கு வந்து தயாரிப்பாளரிடம் பேசி அந்த கருவியை அவர்களே உருவாக்கி அதை கங்குவா திரைப்படத்தில் பயன்படுத்தியும் இருக்கின்றனர்.
அதை வெளிநாட்டில் சென்று வாங்கும் அளவிற்கு பணம் இல்லாததால் பணத்தை மிச்ச படுத்துவதற்காக இப்படி ஒரு வேலையை செய்திருக்கிறார் சிறுத்தை சிவா.