அய்யோ அக்கா செருப்பை எல்லாம் எடுக்காத!.. ஷகிலாவிற்கு பயந்து ஓடிய தளபதி!.. இது வேற நடந்துச்சா!.
Thalapathy Vijay : என்னதான் விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் கூட அவர் மற்ற நடிகர்களிடம் மிகவும் நல்ல முறையில் பழகக் கூடியவர் என்பது பலரும் கூறும் விஷயமாகும்.
லியோ திரைப்படத்தின் படபிடிப்பு நடந்த போது கூட அதில் ஒரு காட்சிக்கு மட்டும் நடிக்க வந்த நடிகர் வையாபுரியிடம் மிகவும் நட்பாக பேசினாராம் விஜய்.
ஏனெனில் விஜய்யுடன் ஏகப்பட்ட திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் வையாபுரி. இந்த நிகழ்வுகளை வையாபுரி ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இதே போல தனக்கு நடந்த நிகழ்வு ஒன்றை நடிகை சகிலா ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அழகிய தமிழ் மகன் திரைப்படம் எடுக்கப்பட்டு கொண்டிருந்தபோது அதில் ஒரு காட்சியில் நடிப்பதற்கு சகிலாவை அழைத்திருந்தனர். அந்த சமயத்தில் விஜய் யாருடனும் பெரிதாக பேச மாட்டார் என்று கேள்விப்பட்ட சகிலா விஜய்யுடன் எனக்கு காட்சிகள் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
விஜய்யுடன் எந்த காட்சிகளும் இல்லை என்று கூறி பட குழுவினரும் அவரை அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு இருந்த முதல் காட்சியே விஜய்யுடன் சேர்ந்து தான் இருந்தது. அந்த காட்சியில் நடிக்க வந்த விஜய் சகிலாவை பார்த்தவுடனே ஹாய் சகி என்று சத்தமாக அழைத்திருக்கிறார்.
இவ்வளவு இயல்பாக விஜய் அப்போது பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று சகிலா அது குறித்து கூறுகிறார். மேலும் அந்த காட்சியில் சந்தானம் ஷகிலாவை கேலி செய்யும் வகையில் ஒரு டயலாக் ஒன்றை பேசுவார் அதைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது கொசு கடித்ததால் அதை அடிப்பதற்கு கீழே குனிந்தார் சகிலா.
அதை பார்த்து அவர் செருப்பைதான் எடுக்கிறார் என்று பயந்து விஜய்யும் சந்தானமும் ஓடி இருக்கின்றனர். எதற்காக ஓடுகிறீர்கள் என சகிலா கேட்க நான் சொன்ன டயலாகிற்கு கடுப்பாகி செருப்பை எடுக்கிறீர்களோ என பயந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் சந்தானம். இந்த நிகழ்வை சகிலா அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.