துப்பறிவாளன் வச்சி தூண்டில் போடும் விஷால்!.. தளபதி சிக்குவாரா…

Actor Vishal and Vijay: தமிழ் சினிமாவில் வெகு நாட்களுக்கு பிறகு மார்க் ஆண்டனி என்னும் திரைப்படம் மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் விஷாலுக்கு முக்கியமாக அமைந்த திரைப்படங்களில் துப்பறிவாளன் திரைப்படம் முக்கியமானது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கியிருந்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் மிஸ்கின் எடுப்பதாக முடிவானது.

ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிஸ்கின் சம்பளமாக கேட்ட தொகை விஷாலுக்கு அதிகமாக தெரிந்ததால் அது தொடர்பாக இருவருக்கும் சண்டை உண்டானது. இந்த நிலையில் துப்பறிவாளன் 2 திரைப்படம் பாதியிலேயே நின்று போனது. எனவே அந்த படத்தை விஷாலே இயக்கி வெளியிட முடிவு செய்தார்.

vishal1
vishal1
Social Media Bar

இதற்கு நடுவே விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசையும் விஷாலுக்கு இருந்து வந்தது. எனவே இதுக்குறித்து அவர் விஜய்யிடம் ஒரு கதையை கூறியதாகவும் கூறப்படுகிறது.

தற்சமயம் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் விஷால். இந்த படத்தை சிறப்பாக இயக்குவதன் மூலம் அடுத்து விஜய்யிடம் வாய்ப்பு வாங்கிவிடலாம் என திட்டமிடுகிறார் விஷால். ஆனால் அரசியலுக்கு செல்லவிருக்கும் விஜய் அடுத்து தமிழில் படம் நடிக்க போவதில்லை என கூறி இருப்பதால் விஷாலின் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே..