நஷ்ட ஈடெல்லாம் கொடுக்க முடியாது!.. த்ரிஷாவை எதிர்க்க உதயநிதியிடம் சென்ற ஏ.வி ராஜு!..

AV raju: கடந்த சில தினங்களாக த்ரிஷா தொடர்பான சர்ச்சைதான் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சையாக இருக்கிறது. அதிமுகவிலிருந்து விலகிய ஏ.வி ராஜு பேசிய சில விஷயங்கள் திரிஷாவிற்கு எதிராக இருந்ததால் அவை பெரும் சர்ச்சை ஆகின.

கூவத்தூர் பங்களாவில்  எம்.எல்.ஏ ஒருவருக்காக திரிஷாவை அழைத்து வந்ததாக அவர் பேசியிருந்தது பெரிதும் பரபரப்பானது. இதனை அடுத்து கோபமடைந்த த்ரிஷா இதனை கண்டித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

Social Media Bar

மேலும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரிஷா கூறியிருந்தார். இந்த நிலையில் திரிஷாவிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க துவங்கினர். சமூக வலைதளங்களிலும் இந்த அரசியல்வாதி பேசியதற்கு எதிரான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தன.

த்ரிஷா எடுத்த முடிவு:

இந்த நிலையில் இனி யாருமே தன்னை பற்றி தவறாக பேசக்கூடாது என்பதற்காக திரிஷா ஒரு விஷயத்தை செய்தார். அதாவது ஏ.வி ராஜு அனைத்து முக்கிய பத்திரிகைகளையும் அழைத்து அதன் முன்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

trisha av raju 1
trisha av raju 1

இல்லை என்றால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார். மேலும் பெரும் தொகை ஒன்றை நஷ்டஈட்டாக கேட்டிருக்கிறார் த்ரிஷா. இது இரண்டையும் செய்யாத பட்சத்தில் அவர் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக கூறியிருந்தார் த்ரிஷா.

ஆதரவு தேடிய ஏ.வி ராஜு

இந்த நிலையில் அரசியல் ரீதியாக தனக்கு ஆதரவு இல்லாத காரணத்தினால் எ.வி. ராஜு திமுக கட்சியில் இணைவதற்கு முடிவு செய்து இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து அவர் உதயநிதியிடம் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகை குறித்து அவமரியாதையாக பேசிய ஒருவரை தி.மு.க கட்சி ஏற்றுக்கொள்ளுமா என்பதும் சந்தேகமே என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைத்துவிட்டால் எளிதாக த்ரிஷாவை எதிர்க்க முடியும் என்று நினைக்கிறார் ஏவி ராஜு. என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.